உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)
எண்சாண் உடம்பில், ஒரு சாண் வயிறு நிரம்ப
ஏழு நாட்களும் உழைக்கின்றோம், ஆனால்
ஆறுதலுக்குக்கூட உழுவதை உயர்வாக மதிப்பதில்லை, காரணம்
ஐந்து அறிவுகொண்ட மனிதராக மாறிவிட்டோம்
நாளுக்கு, கோடி தொழில் பெருகினாலும்
மூன்று வேளை உணவு உண்ண உழவு தேவை
இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால், உண்மை
ஒன்று புரிந்துவிடும், ஆம், உலகம்
பூஜ்ஜியம் ஆகிவிடும் உழவில்லையேல் எனில்