எலியின் திருவிளையாடல்..
மனிதர்களான நாம் தான் பேங்குக்கு பணம் எடுக்க போவோம். ஆனால் எலியும் பேங்குக்கு போகுமா?
கடந்த வருடம் திருவாரூருக்கு தேரோட்டம் பார்ப்பதற்க தங்கை வீட்டுக்கு போயிருந்தோம். அப்போது கோவிலுக்கு போய்விட்டு வந்து எல்லோரும் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வீட்டின் பின் வாசலில் குப்பை வாளியை யாரோ உருட்டும் சத்தம் கேட்டது. யாரோ வந்து விட்டார்களோ என்று பயந்துபோய் மெதுவாக சென்று பார்த்தால் குப்பைக் கூடைக்குள் பெரிய எலி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
எங்கள் எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் வீட்டில் குட்டீஸ் நிறைய பேர் இருந்ததால் வீட்டுக்குள் எலி வந்து விட்டால் என செய்வது என்றாகிவிட்டது. என் தங்கை தந்து கணவருக்கு போன் செய்தால். அவர் உடனே தனது கம்பெனியில் இருந்து இரண்டு பணியாட்களை கூட்டி வந்தார். அவர்கள் குப்பை கூடையை ஒரு சாக்கில் கொட்டி எடுத்து சென்றனர்.
திருவாரூர் தெப்பக்குளத்தை தாண்டி ஒரு ஓரமாக கொண்டு கொட்டியுள்ளனர். அந்த எலி அருகில் உள்ள பேங்கிற்குள் ஓடி விட்டது. எலி பேங்குக்கு பணம் எடுக்க போகுதடா என்று தெருவில் எல்லோரும் ஒரே கிண்டல்...