..........அநாதை விரல்கள்............

கவிழ்ந்த தலையை தேடி கோதுகிறேன்,
மெதுவாய் நெற்றியில் உள்ளங்கை பதித்து,
தோல்வியின் சாமரம் வியர்வைவீசி அரவணைத்தது,
பெண்டோடு கொண்டாடிய பொழுதுகள்,
அமில ஊற்றை உற்பத்திசெய்தது விழிகளுக்குள்,
தனிமை முதுகில் அடித்து தலைகுப்புற விழுந்த நிழல்,
அதற்குப்பின் அங்கிருந்து எழவேயில்லை,
உணர்ந்து பார்க்கிற உணர்வுடைய ரணம் நேசிக்கிற,
இதயமேதும் அருகாமையில் இல்லவேயில்லை,
அச்சம் நிறைந்த அர்த்தங்கள் ஆடைவிலக்கி ஆர்ப்பரித்து அலறின,
எல்லாமுமாயிருந்த நீ கொல்லாமல்மட்டும் விட்டுப்போனாய்,
எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் தலைகோதியபடியிருந்தது,
"என் அன்பான அநாதை விரல்கள்"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Jan-13, 8:26 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 113

மேலே