அம்மாவின் அன்பு
![](https://eluthu.com/images/loading.gif)
பத்து மாதம் வரை படுத்தினாய் பாடு
பொருத்து கொண்டால் பாசத்தினால்
உன்னை காக்க தானே போர்வையானள்
உடம்பு வலிக்க வெளியே குதித்தாய் வந்து
வந்ததும் வாரி அனைத்தால்
வலிகளை மறந்து வாரி அனைத்தால்
உன் பின்னந்தலை பிடித்து மண்டலம்
ஒன்று தாலாட்டினால் நின் தலை நிமிற!
நிமிர்ந்த உன்னை தவழ வைத்தை
தவழ்ந்த உன்னை நடை பழக்கினாள்
நல்லுடை உடுத்தி சீராட்டினாள்
நானிலம் போற்ற நல் வழி காட்டினாள்!
காட்டிய பாதையில் கரம் பிடித்து நடந்தாள்
நடக்கும் போது நோகாமல் காத்தாள்
அடம் பிடித்தாய் அடக்கி விட்டாள்
அன்பு முத்தமிட்டு!
இட்ட சண்டை கொஞ்சமோ குளிக்க!
மிச்சமின்றி குளிக்க வைத்தாள்
முடித்த பின் முகம் துடைத்து
மீண்டும் பாலூட்டி தாலாட்டினாள்!
நின் மழலை மாறியது,
நின் பேச்சு மாறியது
நின் அன்பும் மாறியது
என்றும் மாறவில்லை
அண்னை அன்பு மட்டும்!