கற்பழிப்பும் நம் மனித கலாச்சாரமும்

பழுதடைந்து போன
நாகரீகம் உள்ள
வரை........

படைத்தல் அல்லாத
கல்விமுறை உள்ள
வரை ..................

புதுபிக்க படாத
சட்டமுறைகள்
உள்ள வரை ..........

அர்ப்பணிப்பு உணர்வற்ற
அரசியல் உள்ள
வரை......

இளைஞனின் வேலையில்லா
திண்டாட்டம் ஓயும்
வரை........

கற்புநெறியை பாடத்திட்டத்தில்
சேர்த்திடும் நாள்
வரை ........

வியாபார யுக்தியாக
கவர்ச்சி படங்கள்
இருக்கும் வரை......

உழைப்பற்ற உதவாக்கரைகள்
உலகெங்கும் உள்ள
வரை ......

வாழ்க்கையையே
தியானமாக மாற்றும்
வரை.......

சிக்கனமாய் உடை
அணியும் சில சிங்காரிகள்
உள்ள வரை ........

அக்கறையாய் போதை
பொருளை அரசாங்கம்
விற்கும் வரை ........

இதுவரை பதிவான
பாலியல்வன் புகார்கள்
நிலுவையில் உள்ள
வரை......

கலவி எனும்
இறைகொடையை பாவமாக
கருதும் வரை.....

தற்குறிஆண்களுக்கு
தாயுள்ளம் தோன்றும்
வரை........

மென்மேலும்
தொடரும் கற்பழிப்பு
என்னும்
வன்முறை!!!!!!!!!!!!!

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (6-Jan-13, 5:17 pm)
பார்வை : 316

மேலே