உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே ................(பொங்கல் கவிதைப் போட்டி )
வறண்ட வயல் நிலத்தில் ......
பிளவுற்று ..சிதறிக் கிடந்தன ...
உழவும்
உழவு சார்ந்த உயிரும்....
...............................................
வறண்டு ..போயிருந்த ஈரம்...
பசியாற்ற முன்வந்தது..... .
நத்தைகளும் எலிகளும் மட்டும்.
-----------------------------------------------------------
வர மறுத்த வெள்ளாமை .....
வீடு வந்து சேர்ந்தன
வேலியோர அரளிவிதை.
...........................................................
உரத்தின் விலைபோலவே..
உயர்ந்து போன கடன் சுமைகள் .....
வீட்டுக்குள்ளேயே.. திறக்கப்பட்டன
பூச்சிக்கொல்லி குப்பிகள் ...
----------------------------------------------------
தலை நிமிராத கதிர்கள் ....
ரத்தத்துடன் தலை சாய்ந்தது
கதிர் அறுக்கும் அருவாள் ...
..................................................................................
வாய்க்கு வரும் அரிசிகள்
பலநேரம்
வாய்க்கரிசியாய் .................
............................................................
ஒவ்வொரு பருக்கைகளும்
எழுதின
உழவனின் கண்ணீர் வலிகளை ...