விரலில் உள்ளதா...?
விரல்கள் எத்தனை கொத்திப் பார்த்தன
எழுத்துக்களால்...
கவிதை பிறந்ததோ சிலர்க்கே.......
பலருக்கும் வரிகள் மட்டுமே..
சிரிப்புகளாய்....
சின சிதறலாய்....
கிறுக்கலின் வலிகளாய்...
அன்றியும்
இன்னமும் விரல்கள்
கொத்திக்கொண்டே
கவிதைகளில் அர்த்தங்களைத்
தேடியவாறு...
ஒரு கவிதையில்
அர்த்தம் என்பது
அது கவிதை என்பதை விட
வேறு என்னவாக இருக்க முடியும்...?
கவிதை பிறப்பது எளிதென்றாலும்
கடைசி வரை
கவிதை கவிதையாய் இருந்தால் தான்
அது கவிதை..
எழுத்துக்களின் வெற்றுத் தொகுப்பல்ல
கவிதை...!!!