உமா மகாதேவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உமா மகாதேவன்
இடம்
பிறந்த தேதி :  20-Feb-1984
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Sep-2013
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  2

என் படைப்புகள்
உமா மகாதேவன் செய்திகள்
உமா மகாதேவன் - சஹானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 4:14 pm

மனதின் இடுக்குகளில் எல்லாம்
தேங்கி நிற்கும் உன் நினைவுகள் -சாலை
ஓரத்தில் நிற்கும் மழை நீர் போலவே!
மனிதர்களுக்கு இடையூறானதால்
உறிஞ்சப்படுகின்றது மழை நீர் -
என்ன ஆச்சர்யம்?
இறைக்க இறைக்கப் பெருகும் சுனை நீரானாய் நீ!

மேலும்

கருத்துக்கு நன்றி நட்பே. தேங்கி நிற்பதில் மழை நீரானாலும் வற்றாத சுனை நீர் போன்றதல்லவோ நினைவுகள்? 05-Nov-2014 6:00 pm
அற்புதம் தோழியே! சுனை நீரை ஏன் மழை நீரோடு ஒப்பிடுகிறாய்? 04-Nov-2014 10:20 pm
நன்றி. 03-Nov-2014 4:26 pm
அழகு 29-Oct-2014 6:48 pm
உமா மகாதேவன் - சஹானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2014 2:31 pm

கண்ணீர்க் கறை கொண்ட கண்களோடு
கடக்க இயலாத நேரங்களைத் தாண்டி
கரையேரப் போராடியதாய் நினைவு ....
கடந்து வந்து திரும்பிப் பார்க்கிறேன்
கடமை தனை நிறைவேற்றினால் போதும்
கடுகி விரையும் காலம் என்ற பாடத்துடன்..
கற்றது அனுபவப் பாடம் தான் என்றாலும்
கருத்தினில் நிற்கிறது காலம்காலமாய்..

மேலும்

கருத்துக்களால் கொஞ்சம் செதுக்குங்கள் தோழர்களே... 21-Jul-2014 2:33 pm
உமா மகாதேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 7:45 pm

வீட்டின் மாடிப்படிகளும்
பயணித்த பாதைகளும்
ஆற்றங்கரை பிள்ளையாரும்
தருகின்றன சில நினைவுகளை
உருண்டோடும் உலகத்தில்
உழன்று கொண்டிருக்கும்
நமக்கு என்றும் புரிவதில்லை
சில நினைவுகளின் ஏகாந்தம்.

மேலும்

அழகு :) 02-Mar-2014 11:21 am
சில நினைவுகளின் ஏகாந்தம்... புரிவதில்லை தான்.வரிகள் அருமை :) 20-Feb-2014 7:17 pm
நன்று 20-Feb-2014 7:07 pm
உமா மகாதேவன் - சஹானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 6:56 am

முடிவுகள் அல்ல தோழா - இங்கே
முயற்சிகள் தான் பேசப்படுகின்றன!

மாற வேண்டியது நீ மட்டுமல்ல ,
உன் பயணப் பாதையும் தான்..
சேரும் இடத்திலல்ல - எப்போதும்
செல்லும் வழியில் கவனம் வை!

விழுதுகளை வேராக்கி நின்று
வியக்க வைக்கும் ஆலம் போல்..
ஒவ்வொரு முயற்சியிலும் உன்
திறமைகளைக் காட்சிப்படுத்து...
நழுவிச் செல்லும் வெற்றிகளை
கட்டி இழுக்கும் கயிறுகள் அவை..

வெற்றி இப்போதில்லை என்றால்
எப்போதும் இல்லை என்பதல்ல,
மற்றொரு பாதை உனக்காகக்
காத்திருக்கிறது என்பது தான்..

பயணங்கள் என்றும் தொடரட்டும்
உள்ளம் குளிரும் வெற்றிகளோடு!

மேலும்

நன்றி நட்பே. 25-Mar-2014 6:10 pm
அழகு :) 02-Mar-2014 11:22 am
நன்றி தோழமையே. 05-Feb-2014 4:59 pm
ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே. 05-Feb-2014 4:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே