அனுபவப்பாடம்
கண்ணீர்க் கறை கொண்ட கண்களோடு
கடக்க இயலாத நேரங்களைத் தாண்டி
கரையேரப் போராடியதாய் நினைவு ....
கடந்து வந்து திரும்பிப் பார்க்கிறேன்
கடமை தனை நிறைவேற்றினால் போதும்
கடுகி விரையும் காலம் என்ற பாடத்துடன்..
கற்றது அனுபவப் பாடம் தான் என்றாலும்
கருத்தினில் நிற்கிறது காலம்காலமாய்..