Bali - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Bali
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  19-May-1973
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Oct-2013
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  41

என் படைப்புகள்
Bali செய்திகள்
Bali - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 10:16 pm

பஞ்சு மிட்டாய்
சத்தம் கேட்டு
பறந்து வந்து
பஞ்சாய் ஒட்டிக்கொள்ளும்
மனம் - ஐன்னலோரம்.
பிடித்த பாடல்
ஒலிக்கும் நேரம்
கொஞ்சம் எட்டித்தான் பார்க்கும்
மனம் - சுவரோரம்.
ஏழு கழுதை
வயதானால் என்ன!
வானவூர்தி பறந்தால்
தாவி தான் பார்க்கும்
மனம் - வானோரம்.
என்றும் மாறாத
அதே அழகு மனம்.
மாறியதென்னவோ

மேலும்

Bali - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 10:13 pm

அப்பா - என்றவுடன்
அலறிக்கொண்டு வருகிறது
அழுகையும்
ஆத்த்ரமும்.
பட்டால் தான்
புரியும் என்றால்
பரவாயில்லை.
போனால் தான்
தெரியும் என்றுணர்த்தும்
வஞ்சகன் - நீ
நிழல் கூட
நகர்ந்துவிடும்
நினைவுகள் மட்டும்
குத்துக்கல்லாய்.
நினைவுகளை
நகர்த்த கூட முடியாத
கோழை - நீ
அப்பாவை
அனுப்பியிருக்கிறேன்.
தரிசிக்க வேண்டியவன் - நீ.

- லக்ஷ்மி பாலா

பி.கு : இந்த படைப்பு கடவுளை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல.

மேலும்

புண்படுத்துவதும் அவன் . புண்படுவதும் அவன் . புரிந்துகொண்டால் நலம் . கோபம் நியாயமானதே . வாழ்த்துக்கள் . 05-Sep-2017 12:35 am
Bali - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 7:54 pm

என்
அம்மாவைப் போல்
என்னையும்
என் அடுக்களையில்
புலம்ப வைக்க
ஆயுத்தமாகிறாய்.
நானோ
புலம்பல்களை
புதைத்துவிட்டு,
கடந்து செல்ல எத்தனிக்கிறேன்.
உனக்காக இல்லை,
என் மகள்
தலைமுறையினரிடம்
புலம்பல்கள்
புலம் பெயர்ந்துவிடக்கூடாதென.
என் தலைமுறை
அம்மாக்கள் அழகாக
மூளைசலவை செய்யப்பட்டு
முன்னேரிவிட்டார்கள் .
அடிமை சுமைதாங்கியிலிருந்து
சுதந்திர சுமைதாங்கிகளாய்.

- லக்ஷ்மி பாலா

மேலும்

பெண்ணாதிக்கம் இல்லறம் முதல் உலகம் வரை... இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2017 7:23 am
Bali - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 7:49 pm

உன்
ஆதிக்கத்தின்
அழுத்தம் தாங்காமல்
விரியும்
கவிதைகள்.
உன்னையும்
உன் நினைவாதிக்கத்தையும்
கவிதைகள் அரிய
வாய்ப்பில்லை தான்.
உனக்கும்
தெரியவில்லை
எனும் போது தான்,
மனம் நழுவி
மீண்டும்
கவிதையில்
விழுகிறது.


-லக்ஷ்மி பாலா

மேலும்

நினைவுகளின் தற்கொலைகள் கவிதைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2017 7:21 am
Bali - Bali அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2014 7:19 pm

இமையை
தாண்ட மறுக்கிறது
கண்ணீர் .

எதிரே
குழந்தைகள் .

மேலும்

Bali - Bali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 10:56 pm

காதலை பறைசாற்ற
ஆயிரம் இணையதளங்கள்
இப்போது .

வருடத்திற்கு ஒரு முறை
நினைவூட்ட
காதலர் தினம்
தற்போது .

ஆண்டாண்டு காலமாய்
காதலையும் வாழ்க்கையையும்
வென்றவர்கள் சொன்ன
பாடங்கள்

காதலில் வெற்றிபெற்றவர்களை விட ,
காதலை விட்டுகொடுத்தவர்களே
காதலின் உண்மையான
சுமைதாங்கிகள் .

இணையதளங்களும்,
காதலர் தினமும் ,
பூக்களும் ,
வாழ்த்து அட்டைகளும் ,
கொண்டாடங்களும்
இன்னுமொரு சுமையே .

இவைதான் இன்றைய
காதலின் அடையாளம்
எனில்
வருந்துகிறோம் .
காதல் சுமைதாங்கியாகக்
இருக்க கூட
தகுதியற்றவர்கள் .

தெரிந்து கொள்ளுங்கள் .
காதலில் வெற்றி பெற ,
கொஞ்சும் கண்களும் ,
கொஞ்சம் க

மேலும்

நன்றி 12-Feb-2014 9:05 pm
நல்ல வரிகள் !! கடைசியில்"போதும்"என்று நிறுத்தக்குறி இடாது " போதுமே " என்று ஆச்சர்யக்குறி இட்டால் ?? 12-Feb-2014 5:48 am
மேலும்...
கருத்துகள்

மேலே