மஹி கணேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மஹி கணேஷ் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 11-Oct-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-May-2018 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 6 |
அழகிய மொட்டுகளுடைய உன் நாக்கின் ஓரத்தால் என்னை உலரவைக்காதே...
அதில் உலர்ந்தாலும் உன் உதட்டுக்குள் வசிக்க என் எச்சிலை வாடகை கொடுப்பேன்....
கலந்தாலும் கலைந்தாலும் நம் இரு இதழ்கள் நான்காக நினைப்பேன்..
இடையே பரிமாற்றம் படைக்க,என் படுகை மோதி கடல் அலை அதற்குள் உன்னை இழுப்பேன்...
நடுக்கடலில் அலைகளின்றி திசை மாறி தொலைந்துவிடுவேன் சீரும் புலி பாய....
புலியின் வேகம் என்னை காயப்படுத்த விழுந்தேன் அவன் காலில் அவன் ஆசை இறையாக.....
சிவந்த உதட்டில் சறுக்கி விழுந்தேன்...
அதை நீ சிறிதாய் கடிக்கையில் உடல் சிலிர்த்தேன்...
மெல்லிய மடிப்பு வெடிப்புகளில் தஞ்சமடைந்தேன்...
நீ எச்சில் நனைக்க அதில் நானும் நனைய நினைத்தேன்...
மனதின் வலிகள் மறைவாய் இருக்க
மணமும் இங்கு நாற்றமெடுக்க
பிறை நிலவும் தன் வெளிச்சம் மறைக்க
இவள் வாழ்வும் இருளானதே....
மதுவும் அவன் மனம் மயக்க
மணந்த நாள் மறந்துபோக
வார்த்தைகள் உலறிகொட்ட
இவள் மனதும் உடைந்ததே...
கண்ணாடி குவளை அவன் போதையாகி
கட்டினவள் கைவிடப்பட்டு
செய்த சத்தியம் உடைந்துபோய்
காகித ரூபாய் கரியாய் போகுதே...
குடித்து களித்து அவன் வீடு திரும்ப
அமைதியாக மனைவி காத்திருக்க
புகையின் வாடை மூச்சை அடைக்க
விழுகிறான் அவள் கையிலே....
கனவிலே உன்னை காண கண் திறந்து கிடந்தேன் பைத்தியமாய்...
நிஜமாய் உன்னை கண்டு மறுநொடி தலைகுனிந்தேன் வெட்கத்தில் முகம் சிவந்து....
மெதுவாய் நீயும் என் பக்கம் வர,
முழுவதுமாய் விழுந்தேன் உன் சுவாசம் தீண்டி..
உன் சுவாசத்தில் விழுந்த என்னை,
உன் ஸ்பரிசத்தில் எழுப்பினாய்,
உனதிரு கைகள் என்னை அனைத்து...!!
உன் கனவிலே நுழைந்து,
பல நினைவுகளும் கொடுத்து,
உன் மனதையும் கெடுத்தேன்...
ஒரு காதல் கவிதை எழுத....!!!
உன் மீதுள்ள ஆசைகளை வார்தைகளாய் கோர்த்து, வர்ணங்களாய் தொடுத்தேன் இவ்வாறாக...
"உன் கருவிழியிலே விழுந்து,
உன் மூக்கினிலே சறுக்கி,
உன் உதட்டிலே கால் பதித்தேன்...
உன் உதடெச்சிலை சுவைத்து பார்க்க..."
நீ உறங்கினாலும் என் காதலை ஏற்று உதட்டோரமாய் ஒரு புன்னகை பூப்பாயா என ஆவலாய் பார்க்கிறேன் உனதுதட்டை..
அடி சண்டாளி.....
என்னே... உன் உதட்டின் அழகு...
அதை மெலிதாய் கடிக்கும் உன் முத்துக்கள்....
உறங்கினாலும் சிரித்துக்கொண்டு என்னை காதலிக்கிறாயே கள்ளி....!!!