மீனாக்ஷி கண்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மீனாக்ஷி கண்ணன் |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 17-Oct-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 558 |
புள்ளி | : 223 |
வாழ்க்கை கடலில் நீந்த வந்த மீன்களில் ஒரு மீன்
வெகு நேரம் கண்விழித்தவள் லேசாக கண் அயர்ந்தாள்., காலிங் பெல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு மணி பார்த்தாள் 11.30 யில் நின்றது கடிகார முள். எப்போதும் 7 மணிக்கு வந்துவிடுவான் வினித் இன்று இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. தூக்கம் களைந்தவளாய் ஓடி சென்று கதவை திறந்தாள். கதவை திறக்க இவ்வளவு நேரமா உனக்கு என்றவாறு டையை கழட்டி கொண்ட பெட் ரூம்க்கு சென்றான். நந்தினி ஏதும் பேசவில்லை அவன் சென்ற பின் கதவை சாத்திவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள். சாப்பாடு தட்டில் எடுத்து வைத்து கொண்டு படுக்கை அறை நோக்கி நடந்தாள். வினித் உடைகள் மாற்றிக்கொண்டு லுங்கி பணியனில் அமர்ந்து லேப்டாப்ல் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். என்னங்க என்றவ
கல்லூரியில் முதல் நாள் அவளை கண்டேன்.,
துரு துறுவென நானும் வேர்த்து ஒழுகிய முகத்துடன் அவளும் வெட வெடத்து நின்றாள் ஏதோ ராக்கிங்காம்., தேவதையும் பயம் கொள்ளும் என்று நான் அறிந்த நாள்.
ராக்கிங்ல அவள் கை குலுக்க பணிக்கப்பட்டேன்., தலையை திருப்பாமல் கண்களை மட்டும் சுழற்றி என்னை பார்த்தாள்., அம்மாவை தவிர பிற பெண்களிடம் அதிகம் பேசி பழகிடாதவன் ஏனோ பார்த்ததும் அவளை பிடித்துப் போனது அழகாய் அப்படி ஒரு அழகி புது நிறம்., அழகான பல்வரிசையில் இரு தெத்துப்பல்., திருத்தப்படாத புருவம் என ஏதோ எனக்கு பிடித்தது., ஆசையாய் நான் கை நீட்ட சிவந்த விழியாள் என்னை முறைத்த படி கை குலுக்கினாள்., அறிமுகம் இல்லா நாங்கள் அறிந்து
பாடல் வரி.,
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க ...நலமாக ...நீ வாழ்க ...நலமாக ...
எழுத்து எனது.,
நீ மணக்கோலம் காணும் நாள் நான் காண கூடுமோ.,
உன் மன நாளில் உன் கண்கள் என்னை காண தேடுமா., அழகான பட்டுடுத்தி அதற்கேற்ற மாலை சூடி மஹராஜனாய் நீ வருகையில் மலர் தூவி உன்னை எதிர்கொள்ள தேவதயாம் வான்மகளின் முத்த மழை பொழிந்திடுமாம்.., தேவர்களும் பூ மாரி பொழிந்திடுவர் நன்னாளில் உன்னவளின் கை பிடிக்கும் அந்நாளில் உன்னருகில் நான் இருந்து மலர் தூவ ஆவல் கொண்டேன்
பாடல் வரி::
உன்னை நினைக்கவே
நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே
எழுத்து::
அவளைவிட்டு
என்னை பிரிக்க இயலாது என்று
என் இதயத்திற்கும் தெரியும்
பல முறை முயன்றும்
தோற்ற இடம் அல்லவா.,
இதயம் அவளை மறந்துவிட்டதாக நடிக்க கற்றுக்கொண்டது சிறப்பாக., காரணம் நான் வாழ
என் இதயத்தை தவிர
வேறு யாரும் அவ்வளவு
துடித்திருக்க முடியாது
நூலகம் போல
அவள் முகம்., அவள் நினைவுகளை சேமிக்க தொடங்கிய இதயத்தை அதன் போக்கில் விட்டுவிட்டேன்
சைக்கிள் மணியடித்து
குடும்பத்திடம் விடை பெற
தலைவன் முனைகயிலே
துள்ளி குதித்து
வாசலுக்கு வந்தது வாண்டு ஒன்று
அப்பா என்றபடி
நானும் வருவேன்
நானும் வருவேன்
அப்பா நானுப்பா என்றது ஆசையோடு
நாளைக்கு தம்பி என்றதும்
வாடியது குழந்தை முகம்
அந்நேரம் அங்கு
தலைவியும் வந்து நிற்க
வாண்டு முகம் பார்த்து
அப்பா இன்று போய் வரட்டும் தம்பி
நாளை நிச்சயம்
உன்னை அழைத்து செல்வார் என்றாள்
குழந்தையை தூக்கி இடுப்பில் இருத்தியவாறு
ஒரு விதமாக இளவரசன் விடையளிக்க
சிறு புன்னகையோடு
அப்பா உந்தினர் சைக்கிளை
வழக்கம் போல பட்டாசு தொழிற்சாலைக்கு
நேரம் போனது
தாயும் பிள்ளையும் ஆலயம் செ