என் உயிரே உறவே

வெகு நேரம் கண்விழித்தவள் லேசாக கண் அயர்ந்தாள்., காலிங் பெல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு மணி பார்த்தாள் 11.30 யில் நின்றது கடிகார முள். எப்போதும் 7 மணிக்கு வந்துவிடுவான் வினித் இன்று இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. தூக்கம் களைந்தவளாய் ஓடி சென்று கதவை திறந்தாள். கதவை திறக்க இவ்வளவு நேரமா உனக்கு என்றவாறு டையை கழட்டி கொண்ட பெட் ரூம்க்கு சென்றான். நந்தினி ஏதும் பேசவில்லை அவன் சென்ற பின் கதவை சாத்திவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள். சாப்பாடு தட்டில் எடுத்து வைத்து கொண்டு படுக்கை அறை நோக்கி நடந்தாள். வினித் உடைகள் மாற்றிக்கொண்டு லுங்கி பணியனில் அமர்ந்து லேப்டாப்ல் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். என்னங்க என்றவாறு உள்லே சென்றாள் சாப்பாடுங்க என்று இழுத்தாள் அங்க வச்சிட்டு போ என்றான் இல்லங்க என மீண்டும் இழுத்தாள் வச்சிட்டு போ நான் சாப்பிட்டுகிறேன் என்றான் அதட்டலாய் , இல்ல நீங்க சாப்பிட்டா நான் எடுத்து வச்சிருவேன் உனக்கு உன் வேலை முடியனும் மனுஷன் என்ன டென்ஷன்ல இருக்கான் உனக்கு என்ன கவலை என்று சாப்பாட்டை தட்டிவிட்டான்., அவள் மேலே ஏதும் பேசாமல் அங்கிருந்து போய்விட்டாள். மீண்டும் வந்தாள் பால் டம்ளரோடு இதையாவது குடிங்க என சொல்லி சென்றாள். வெகு நேரம் அரை விளக்குகள் எரிந்த வண்ணம் இருந்தது. நந்தினி ஹாலில் அமர்ந்து வினித் இருக்கும் அறையை பார்த்துக்கொண்டே தூங்கிப்போனாள்., காலையில் அவள் எழும் முன் வினித் கிளம்பி போயிருந்தான்., அறைக்கு சென்று பார்த்தாள் பால் அப்படியே இருந்தது சலிப்போடு அதை எடுத்துபோனாள். நைட் அவர் சாப்பிடவில்லை மதியத்துக்கு அவர் நிறைய சாப்பிடுற மாதிரி ஸ்பெஷல் ஆ சமைக்கணும் என்று ஆசை ஆசையாக சமைத்தாள். மணி இரண்டு, முன்று என போய் கொண்டே இருந்தது வினித் வரவில்லை அவனுக்கு போன் போகவில்லை ஆபீஸ்க்கு கால் பண்ண அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பேச முடியாதுன்னு சொல்லிட்டாங்க., மாலை நேரம் போய் இரவு 10 ஆனது வினித்தும் வரவில்லை அவனிடம் இருந்து அழைப்பும் வரவில்லை நேரம் ஆக ஆக நந்தினியும் அப்படியே உறங்கி போனாள். மணி 4 இருக்கும் காலிங் பெல் அலறியது போய் திறந்தாள் வினித் தான் சிவந்த கண்களோடு மிக களைத்து போய் வந்திருந்தான்., நேராக பெட் ரூம்க்கு சென்று அப்படியே படுத்துவிட்டான் மிக முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்லி தன்னை 9 மணிக்கு எழுப்பும் படி சொல்லிவிட்டு உறங்கிப்போனான். நந்தினியும் அவளின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு 9 மணிக்கு எழுப்பினாள் அவசர அவசரமாக கிளம்பி காலை உணவு கூட உண்ணவில்லை நந்தினியிடம் சொல்ல கூட இல்லை அப்படியே ஆபீஸ்க்கு போயிவிட்டான். அவளும் பொறுத்து பொறுத்து பார்த்தாள் அவளால் முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை., அவளும் கிளம்பினால் வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் சாவி தந்து அவர் வந்தால் கொடுங்கள் நான் பக்கத்தில் போய் வருகிறேன் என்று சென்றுவிட்டால். ஆபீஸ்ல் மீட்டிங் நல்ல படியாக முடிந்தது வினித் எதிர்பார்த்த மிக பெரிய ப்ராஜெக்ட் அவனுக்கே கிடைத்தது., மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான் மூன்று நாட்களுக்கு பின்னர் இன்று தான் அவன் பழைய நிலைக்கு வந்தான்., தான் நந்தினியிடம் சரியாய் பேச முடியாமல் டென்ஷன்ல அவளிடம் எவ்வளவு கத்திவிட்டோம் பாவம் அவள் எங்கே போவாள் என்னைத் தவிர யாரு இருக்கா அவளுக்கு ச்சீ சீ நான் என் டென்ஷன்ல அவளை காயப்படுத்திட்டேன் என்று எண்ணிக்கொண்டே அவளுக்கு கால் பண்ணினான் ரிங் போனது அவள் எடுக்கவில்லை., லேண்ட் லைன்க்கு கால் போனதே தவிர அவள் எடுக்கவில்லை
சரி பக்கத்தில் ஏதும் கடைக்கு போயிருப்பாள் சாயங்காலம் போய் அவளை அசத்தி விட வேண்டும் என்று 3 மணிக்கே ஆபீஸ்விட்டு கிளம்பி அவளுக்கு பிடித்த நீல கலர் புடவை மல்லிகைப்பூ , ஸ்வீட் என அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஆசை ஆசையாக வீடு வந்து சேர்ந்தான். வீடு பூட்டி இருந்தது பக்கத்து வீட்டில் சாவி வாங்கி திறந்து காத்திருந்தான் நந்தினிக்கு மணி ஐந்து, ஆறு , எட்டு என நேரம் போய் கொண்டிருந்தது தவிர அவள் வரவில்லை நேரம் ஆக ஆக வினித் அச்சத்தின் விளிம்பில் நின்றான் பக்கத்தில் விசாரித்தான் யாருக்கும் தெரியவில்லை., அவளுக்கு கால் பண்ணினான் அவளின் கை பேசி வீட்டில் தான் அலறியது மணி ஒன்பது அவனுக்கு உயிரே போன மாதிரி இருந்தது எங்கே போனாலும் அவள் சொல்லாமல் போனதில்லை இன்று இவ்வளவு நேரம் ஆகியும் அவள் வீடு வரவில்லை என்றதும் பதட்டத்தில் மூச்சு விடவும் கஷ்டப்பட்டான்., வீட்டுக்கு வாசலுக்கும் நடந்து கொண்டே இருந்தான்., போனையும் எடுக்காமல் எங்கு போனால் என் மீது கோவித்து கொண்டு என்று பதறியவனாய் அவளின் தோழிகளின் நம்பருக்கு போன் பண்ணினான் அவள் அங்கு வரவில்லை என்றே பதில் கிடைத்தது எங்கு போனால் என்ற பயத்தில் வேர்த்து வழிந்தது அழுகையே வந்துவிட்டது வினித்திற்கு., அப்போது ஒரு ஆட்டோ சத்தம் கேட்டு ஓடிவந்தான் அவளே தான் பதட்டத்தோடு இறங்கி வந்தாள்., அவன் வருவதற்குள் வந்து விடலாம் என்று கோவிலுக்கு பிரதோஷ பூஜைக்கு போனவள் நேரம் போனதே தெரியாமல் கோவில் பஜனையில் அமர்ந்துவிட்டாள்., அவளை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான் எங்கடி போன என்னிடம் சொல்லாமல் நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா என்று அவள் மூச்சு கூட விடமுடியாத படி இறுக்கி கட்டிக் கொண்டான்., நான் உன்னிடம் டென்ஷன் ஆனதுக்கு சாரி டி என் செல்லம் என்று கெஞ்சினான் கோவிலுக்கு போனேன்ங்க ஐயோ விடுங்க வாசல்ல வச்சி நீங்க வேற உங்க கிட்ட கோபப்பட்டு நான் எங்க போறது போனா செத்து தான் போகணும் என்று சொல்லிக்கொண்டே அவனை அவள் விலக்க முற்படுகையில், யாரு பார்த்தா என்ன என் பொண்டாட்டி நான் அப்படி தான் கட்டிக்குவேன் என்று அவளை அப்படியே தூக்கி சென்று பெட் ரூம் கதவை சாத்தினான் அவள் அவன் முத்த மழையில் முழுவதும் நனைந்தாள்.,.

எழுதியவர் : மீனாக்ஷி கண்ணன் (1-Jun-17, 9:19 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : en uyire urave
பார்வை : 218

மேலே