காதலுக்கு பின்
காதலுக்குப் பின்:
பலிகொண்டது
தாயின் அரவனைப்பு
பறித்துக்கொண்டது
தந்தையின் நேசம்
மறந்துபோனது
உடன் பிறந்தோரின்
பாசம்
உதறியதே உறவுகளின்
அருகாமை
சொடுக்கும் நேரமதில்
இத்தனையும்
நடந்தேரியதே
ஒரு நொடி அதிசயம்
உன் உருவ அபிநயம்
சிலிர்த்து போனேன்,
கண்ணுக்குள்ளே உன்
வரவு!
கலைந்து போனது என்
நினைவடுக்கு
உன் பெயரை மட்டும்
உச்சரித்தபடி
என் நெஞ்சதுடிப்பு!
#sof_sekar