சுபஆனந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுபஆனந்தன்
இடம்:  திருவேலன்குடி
பிறந்த தேதி :  22-Aug-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2017
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  3

என்னைப் பற்றி...

சாமானியன்

என் படைப்புகள்
சுபஆனந்தன் செய்திகள்
சுபஆனந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2017 12:49 pm

#ஏழ்மையாக இருந்தாலும்
#எழுந்து நடக்க
#எவர் உதவியும்
#எனக்கு தேவையில்லை ..
#என்னிடம் "தன்னம்பிக்கை "
#எனும் தாரக மந்திரம் உள்ளது ...
#எவருக்காகவும் காத்திருக்காமல்..
#எழுந்து நடப்பேன்
..."ஒருநாள் "...

மேலும்

சுபஆனந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2017 11:24 am

#அன்னையே
#அன்பின் எல்லையே ......

#உன் முகத்தைக் காண
உன் கருவறையில் நீ கொடுத்த
#உயிராய் பத்துதிங்கள் காத்திருந்து
உன் உயிராய் உன்னைக் கண்டேனே ....

#உறங்குவதற்கு பல இடங்கள்
இருந்தும் நான் - நிம்மதியாக
#உறங்கியும் துள்ளிக்குதித்ததும்
உரிமையுடன் உன் மடியில் தானே....

#தரையில் நிற்காத என் பாதங்கள்
தரையிலூன்றி நின்று நடப்பதைக் காண
#நாள் முழுக்க காவலாய் இருந்து
#நான் விழுமுன் தாங்கிபிடித்ததும் நீ தானே..

#பள்ளி செல்லும் நாட்களில்
பாடப்புத்தகங்களை நான் சுமக்க
#இரண்டையும் சேர்த்து இடுப்பில்
தூக்கி சுமை குறைத்ததும் நீ தானே...

#நாலு நட்சத்திரங்களை பெற்றும்
நல்ல

மேலும்

சுபஆனந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2017 11:13 am

#தன்னம்பிக்கையின் தத்துபிள்ளை .....
......#தங்கவேலு மாரியப்பனுக்காக.....#என் கவிதை ....

#ஆனி தொன்னுற்றைந்தில் தோன்றி
தமிழகத்தின் புகழை....
#ஆவனியில் உயர்த்திய
தமிழகத்தின் அதிசய நாயகனே .....

#கிராமமாம் பெரிய வடகம் பட்டியில்
தாய் சரோஜாவின் மகனாய் ..
#கஷ்டபடும் குடும்பத்தில்
தோன்றிய மாபெரும் சரித்திரமே ....

#கடவுள் உன்னை சாதனையாளனாக
மாற்ற எண்ணி - உன்
#கால் கட்டைவிரலை தவிர
மற்ற அனைத்தையும் பறித்துக்கொள்ள ..

#சகமனிதனாக இல்லையே என்ற குறை
உன் மனதில் எழாமல் - இருக்க ..
#சாதிக்கும் எண்ணத்தை விளையாட்டின் மீது
திருப்பிய பெருமை அவனையே

மேலும்

சுபஆனந்தன் - எண்ணம் (public)
16-May-2017 11:09 am

கவிதைகளை பதிவிடுவது எப்படி ??


மேலும்

சுபஆனந்தன் - மன்சூர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2017 10:49 pm

ஹிந்தி தேவை இல்லை என்போருக்கு,

நாம் அனனைவரும் இந்தியர்கள்.
பல மொழி, மதம், கலாச்சாரம் என்றிருந்தாலும் நம் அனைவரையும் ஒன்றுசேர்க்கிறது இந்தியா!

உலக மொழி என்று ஒன்று தேவை படும்போது இந்திய மொழி என்று ஒன்று வேண்டாமோ?

நம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்கள் ஹிந்தியில் பேசி நல்ல
ப்ராஜெக்ட் எடுத்துக்கொண்டு வீணா போன ப்ராஜெக்ட் மட்டும் நம் மாநிலத்திற்கு,

ஹிந்தி திணிப்பு எதிர்க்க வேண்டி ஒன்றுதான், அனால் ஆறாம் பாடமாக ஐந்தாவதிலிருந்து சப்ஜெக்ட் பாஸ் பைல் இல்லாமல் ஹிந்தி இருந்தால் இந்திய மொழியை கற்றுக்கொள்வதில் என்ன பிழை?

ஹிந்தி தேவையா?
உங்கள் கருத்துக்களை வெளியிடவும்

மேலும்

தேசிய நீரோட்டத்தோடு இணைய விரும்பாதவர்களே (தனி நாடு கோஷ்டி) இந்தி வேண்டாம் என்பார்கள். 06-Jul-2017 2:36 am
தமிழன் என்றால் தமிழ் வேண்டும்! இந்தியன் என்றால் இந்தி வேண்டும்! உலகன் என்றால் ஆங்கிலம் வேண்டும்! 06-Jul-2017 2:33 am
சென்னையை தாண்டி வெளியே செல்லும் போது ஹிந்தி தெரிந்திருந்தால் மற்றவர்களுடன் தகவல் தொடர்புக்குப் பயன்படும் தமிழ் ஆங்கிலம் போலும் ஹிந்தியும் ஒரு மொழி . அதிலும் செறிந்த இலக்கிய வளம் உண்டு. இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் அதைப் படிக்கலாம் ஓர் இலக்கியவாதிக்கு மொழி என்பது இதய நதி. மற்றபடி மொழி இனம் மதம் சாதி என்பன அரசியல் வாதிகள் உருட்டும் பகடைகள் . உலகம் முடியும் வரை இவையெல்லாம் தொடரும் . அன்புடன்,கவின் சாரலன் 20-May-2017 9:02 pm
இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழி என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி, தேசிய மொழி அல்ல. இந்தியாவின் தேசிய மொழி என்று தனியாக ஒரு மொழி கிடையாது. இந்தி என்பது இந்தியாவின் ஆட்சி மொழி. அதாவது, மத்திய அரசின் அலுவல்கள் நடைபெறுவதற்குப் பயன்படுத்தப்படும் மொழி. அதிலும்கூட, ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் நமது தமிழ் உள்பட 22 மொழிகள் உள்ளன. இவை அனைத்துமே இந்தியாவில் சமமான தகுதிகளையுடைய மொழிகளாகும். மேலும் சிலமொழிகளை இந்த அட்டவணையில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியா முழுவதும் இந்தியை மட்டுமே பரப்புவதற்கு அவ்வப்போது ஆட்சியாளர்கள் முயற்சி செய்வதும், அது முறியடிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது அவ்வப் போது, மத்திய ஆட்சியாளர்கள் தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிப்பதற்கும் வெவ்வேறு வகையில் முயற்சி செய்துவருகிறார்கள். இந்தியைப் படிப்பது என்பது தவறாகாது. தேவைப்படுமெனில் ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், இதனைக் கற்றுத்தான் ஆகவேண்டும் எனத் திணிப்பதையே தமிழகம் தொடர்ந்து எதிர்த்துவருகிறது. எனினும், இந்தி பிரச்சார சபா, மத்திய அரசு கல்வித்திட்டத்திலான பள்ளிகள், மாநில அரசின் கல்வித்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாகக் கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதனையும் மீறி, இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக்கும் முயற்சிகளை 2014-ஆம் ஆண்டில் மத்தியில் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மற்றும் மத்திய அரசின் சமூக வலைத்தளங்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என மாற்றியது, மத்திய அரசு பள்ளிகளில் கட்டாயமாக சமஸ்கிருத வாரம் கொண்டாடச் செய்தது,ஜெர்மன் மொழிப்பாடத்தைத் திடீரென நீக்கிவிட்டு சமஸ்கிருத மொழியைத் திணித்தது, ஆங்கிலத்தில் தரப்படும் அரசு விளம்பரங்களில்கூட இந்தி உச்சரிப்பின்படி வார்த்தைகளை வெளியிடுவது, மற்றமொழிகளைவிட இந்திக்கும் சமஸ்கிருதத் திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கி அவற்றை வளரச் செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இன்றைய மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, பல்வேறு இனங்களையும் மதங்களையும் சாதிகளையும் சேர்ந்தவர்கள் வாழக்கூடிய ஒரு பெரும் நிலப்பரப்பாகும். இவர்கள் அனைவருமே இந்தியாவின் குடிமக்கள். அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. அவர்களின் மொழிகளுக்கும் அப்படியே! இந்த பன்முகத்தன்மையும் மதச்சார்பின்மைக் கொள்கையும் தான் இந்தியாவுக்குப் பலமாக உள்ளது. பெரும்பான்மை என்றால்... உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் அல்ல. இணையதளத்தில் பயன்பாட்டு மொழியில் இரண்டாம் இடம் தமிழ்.! முக்கியமாக இந்திய தேசிய... பறவை மிருகம் மலர் மரம் விளையாட்டு... எதுவும் பெரும்பான்மையிலிருந்து தேர்வு செய்யபடவில்லை.! இந்தபதிவு இந்தி எதிர்பினால் அல்ல.. தமிழ் பற்றினால் மட்டுமே.. நட்புடன் குமரி. 16-May-2017 11:35 am
மேலும்...
கருத்துகள்

மேலே