அன்னையே அன்பின் எல்லையே
#அன்னையே
#அன்பின் எல்லையே ......
#உன் முகத்தைக் காண
உன் கருவறையில் நீ கொடுத்த
#உயிராய் பத்துதிங்கள் காத்திருந்து
உன் உயிராய் உன்னைக் கண்டேனே ....
#உறங்குவதற்கு பல இடங்கள்
இருந்தும் நான் - நிம்மதியாக
#உறங்கியும் துள்ளிக்குதித்ததும்
உரிமையுடன் உன் மடியில் தானே....
#தரையில் நிற்காத என் பாதங்கள்
தரையிலூன்றி நின்று நடப்பதைக் காண
#நாள் முழுக்க காவலாய் இருந்து
#நான் விழுமுன் தாங்கிபிடித்ததும் நீ தானே..
#பள்ளி செல்லும் நாட்களில்
பாடப்புத்தகங்களை நான் சுமக்க
#இரண்டையும் சேர்த்து இடுப்பில்
தூக்கி சுமை குறைத்ததும் நீ தானே...
#நாலு நட்சத்திரங்களை பெற்றும்
நல்ல கருத்துக்களை என்னுலூட்டி
#நல்லறிவை புகட்டி சமூகத்தில்
#நல்ல மனிதனாய் தேற்றியதும் நீ தானே...
#தோல்வியுற்று சோகத்தில் இருந்தபோது
தேடி வந்து அனைத்து சோகத்தை போக்கியும்
#சாதிக்க வழி காட்டி என்னை
சாதிக்க வைத்ததும் நீ தானே...
#ஆயிரம் தடவை தலை சீவினாலும்
#உன் கைகளால் ஒருமுறை
#என் தலைமுடியை கோரினால்
#அதுவே போதும் என்ற நாட்களை தந்ததும் நீ தானே ...
#என் அடுத்த பிறவி என்றால்
உன் #பக்தனாக பிறப்பேன்
#உன்னை கடவுளாக வணங்கி
#உனக்கு மரியாதைகள் பல செய்ய ...
#இவ்வரிகளை அனைத்து அன்னையர்களுக்கும் சமர்பித்து
"அன்னையர்" தின வாழ்த்து கூறுவது உங்கள்
#சுப.ஆனந்தன் ......