ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-May-2015
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  0

என் படைப்புகள்
ஸ்ரீ செய்திகள்
ஸ்ரீ - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 2:38 pm

அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !

சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!


-அரங்க ஸ்ரீஜா

மேலும்

மிக்க நன்றி :-) 18-Jun-2015 8:28 am
ஓவியத்தில் கை தேர்ந்த சகோதரி கவிதையிலும் ஜொலிப்பது அருமை !! 18-Jun-2015 7:35 am
ஸ்ரீ - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2015 1:53 pm

நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை

விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்

கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .

மேலும்

படமும் கவியும் அழகு !! 21-Jul-2015 7:53 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
விரல்களுக்கும் விரல்களுக்கும் போட்டி...ஓவியமா ?? கவிதையா ?? பதில் இல்லை தோழியே..அருமை 08-Jul-2015 6:58 pm
ஸ்ரீ - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2015 8:13 am

விலைக்கு மேல் விலை விற்றாலும்
மனிதனின் விலை என்ன ?
உயிர் விட்டு விட்டால் !
உடல் சுட்டு விட்டால் !

ஒருவரின் இறப்புக்குப் பின்
அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை !
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .

" மனிதன் தெய்வ சாயலில்
தெய்வ சக்தியுடன்
தெய்வ சாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் "

அப்படி இருக்க, வாழ்கின்ற மனித உயிர்களை வாட விடலாமா ?
அது தெய்வத்தை வாட விட்டதற்குச் சமம் அல்லவா ?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வடினாரே !
அருட்பிரகாசர் ஏன் தெரியுமா ?
பரந்த உள்ளமே பரம்ப

மேலும்

தமது வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ! 02-Jun-2015 11:34 am
அருமையான அலசல் ! அசத்தல் 02-Jun-2015 11:31 am
தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நட்பே :-) !! 25-May-2015 10:32 pm
பிரம்மிப்பாக உள்ளது ... அன்பிற்குண்டோ அடைக்கும்தாள் ... அன்பைக்கொடுத்து அன்பைப் பெறுதலே ... இறையருள் பெரும் வழி , வாடிய பயிரைக் கண்ட போது வாடுதலே ...உள்ளத்தில் நல்ல உள்ளம் . வழிபடும் கரங்களை விட உதவிடும் கரங்களே உயர்ந்தவை ...என்பதை வெளிப்படுத்தும் நல்ல படைப்பு ... வாழ்த்துக்கள் 25-May-2015 10:15 pm
ஸ்ரீ - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2015 10:45 am

வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !

இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்

பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்

மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே

- அரங்க ஸ்ரீஜா

மேலும்

மிக்க நன்றி :-) 18-Jun-2015 8:29 am
வார்த்தையிலும், வரைந்தது அழகு !!! 18-Jun-2015 7:29 am
நன்றி நட்பே :-) 08-Jun-2015 10:04 pm
நல்லா இருக்கு அக்கா 08-Jun-2015 11:32 am
மேலும்...
கருத்துகள்

மேலே