HELENJOSEPH - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : HELENJOSEPH |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Mar-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 3 |
உன்னை பார்த்தும்
பார்க்காததுபோல்
நான் நடிப்பது பொய்.......!
நீ காதல் சொல்ல வரும்போதெல்லாம்
நான் புற முதுகிடுவது,
உன்னை பிடிக்காததால் அல்ல......!
என் தோல்வியை ஒப்புகொள்வதால்......
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
நான் மௌனம் சாதிப்பது,
உன்னை பிடிக்காததால் அல்ல.....!
உன் புன்னகையை நிரந்தரமாக்க
திட்டம் தீட்டுவதால்.........
நீ என்னை ரசிப்பது தெரிந்தும்
தெரியாதது போல் நான் நடிப்பது பொய்....
உன் ரசனைக்கு நான் ரசிகையாக இருப்பதால்.......
இப்படி,
தினம் தினம் நமக்குள் நடக்கும்
இந்த காதல் யுத்தம்
ஒரு நாள் முடிவு பெரும்.......
அப்போது உன் ஆயுள் கைதியாய்
நான் சொல்ல போகும் ஓர் உண்மை
உன் பிஞ்சு விரல்
என் நெஞ்சில் பட
ஏங்கியவன் தான்
இன்று
உன் நஞ்சு வார்த்தை தனை
தாங்காமல் நெஞ்செமெல்லாம்
வேகுகின்றேன்
அப்பா என்றாய்
ஆனந்தம் பட்டேன்
அவனே இவனே
என்கிறாய்
வேதனை பட்டேன்
சொத்தாய் உன்னை தான்
எண்ணி இருந்தேன்
நீ என் சொத்தை
மட்டுமே எண்ணி இருக்கிறாய்
நண்பனாய் உன்னோடு
நான் பழகி வந்தேன்
ஆனால்
நீயோ என்னை எதிரியாய்
மட்டும் பாவித்து இருக்கிறாய்
நீ பிறக்கும் நாளை
நான் தீர்மானித்தேன்
நான் இறக்கும் நாளை
நீ தீர்மானிக்கிறாய்
உன் உயிர் கொடுத்த
தந்தைக்கு
ஒரு பிடி சோறு தர
முடியாத மகன் நீ
மகன் மட்டும்
போதும்
மகள் வேண்டாம்
என்று சொல்ல
நே இல்லாத
என் வாழ்வில்
மகிழ்ச்சி என்பது
கானல் நீராகவே விடும்
நிரந்தரம் என்பதில்
துளியும் நம்பிக்கை இல்லை
உன் விரல் thottu
அணிந்த அந்த
மாங்கல்யம் என்
இதயம் thotte போது
ஏழு ஜென்மமும்
உண்மையோ என
புரியவைத்தது உன்
அருகாமை
உங்களுக்கு வகுப்பறை எல்லாம்
பள்ளியறை என்றால்
புத்தகங்கள்தான்
தலையணை!
அம்மா பாடாத தாலாட்டை
ஆசிரியர் பாடும் போது
அவர் கைகளில் வீணையாய்
தவழ்வது புத்தகம்.
கல்லூரி நேரம் முடிந்தவுடன்
மாணவர் கைகளில்
சுழலும் விஷ்ணு சக்கரம்.
நெரிசல் நிறைந்த பேருந்துகளில்
காதல் கடிதத்தைக்
கச்சிதமாய் மறைத்து
ஜன்னல் வழியே
உரிய இடத்தில் சேர்க்கும்
அஞ்சலகம்.
பள்ளி நாட்களில்
மறைவாய் ஒளித்து வைத்த
மயில் இறகு
குட்டிகளை ஈனும்
பிரசவ அறை.
புத்தக வாசனை
சிலருக்கு ஆகாது.
பிடித்துப் போனவருக்கு
நாசியை விட்டுப் போகாது.
புத்தகத்தின் உண்மைநிலை
உணர்ந்தால் அதன் மீது
காதல் வளரும்.
புத்தகத்தின
நிராகரிபுகளில் வாழ்க்கையை
கற்றுக்கொள்ளும் நான்
உன்னுடைய நிராகரிப்பில்
எதையும் கற்றுக்கொள்ளாமல்
உன்னிடம் வரும்
என் மனது
வருடம் முழுதும்
என் காதலை
வளரச்சயும்
எப்போதான -உன்
விசாரிப்புகள்