தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

உன் பிஞ்சு விரல்
என் நெஞ்சில் பட
ஏங்கியவன் தான்
இன்று
உன் நஞ்சு வார்த்தை தனை
தாங்காமல் நெஞ்செமெல்லாம்
வேகுகின்றேன்

அப்பா என்றாய்
ஆனந்தம் பட்டேன்
அவனே இவனே
என்கிறாய்
வேதனை பட்டேன்

சொத்தாய் உன்னை தான்
எண்ணி இருந்தேன்
நீ என் சொத்தை
மட்டுமே எண்ணி இருக்கிறாய்

நண்பனாய் உன்னோடு
நான் பழகி வந்தேன்
ஆனால்
நீயோ என்னை எதிரியாய்
மட்டும் பாவித்து இருக்கிறாய்

நீ பிறக்கும் நாளை
நான் தீர்மானித்தேன்
நான் இறக்கும் நாளை
நீ தீர்மானிக்கிறாய்

உன் உயிர் கொடுத்த
தந்தைக்கு
ஒரு பிடி சோறு தர
முடியாத மகன் நீ

மகன் மட்டும்
போதும்
மகள் வேண்டாம்
என்று சொல்லும்
மானுடமே
மகன் மட்டும்
பெற்ற மகராசர் தான்
இன்று முதியோர் இல்லத்தில்

அவமான சின்னமாய்
அப்பாவை நினைக்காதே
நாளை நீயும்
அப்பா ஆவாய்

உன்னை வளர்க்க
வேர்வை சிந்தினேன்
இன்று
உன்னால் கண்ணீர்
சிந்தி கொண்டு இருக்கிறேன்

மகனே
எதுவானாலும்
நீ என் மகன்
நீடுழி நீ வாழ்க

அப்பாவின் கடைசி ஆசை
நான் இறந்த பின்பு
அனாதை பிணம் என்று
அறிவித்து விடாதே

எழுதியவர் : கார்த்திக் (23-Feb-14, 12:47 pm)
பார்வை : 2589

மேலே