ஐய்யப்பன் ம - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஐய்யப்பன் ம |
இடம் | : kurinjipadi |
பிறந்த தேதி | : 04-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 0 |
வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய் அமர்ந்திருந்த அந்த காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் ஸ்பரிசமும், ஒருவித ஏகாந்த உணர்வினை பரப்பிக்கொண்டிருந்தன.
முன் வெயிலாய் இருந்ததாலும் கார்கால மாதமாய் இருந்ததால் ஒரு வித கட்டுப்பாட்டுடன் சூட்டினை பரப்பிக் கொண்டிருந்தான் சூரியன். திண்ணையில் ஒரு ஈசி சேரில் சாய்ந்த படி நான்... வலது கையில் பெரிய மாவு கட்டு..ஆமா....அதன் விளைவு நான் கல்லூரி போகாமல் லீவில்...! அது என்ன மாவுகட்டு...? அதை அப்புறம் பாக்கலாம்..முதல்ல உள்ள எங்க வீட்டுக்குள்ள பாருங்க... என்ன நடக்குதுன்னு......
அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க, அம்மா தங
அலுப்பு தட்டாத வயல்வெளிகளையும், அருகருகே நிறைந்த காடுகளையும் சுமந்து எந்நேரமும் உடல் உழப்பை மட்டுமே நம்பி இருந்த என் கிராமத்தின் மூடப் பழக்கங்கள் நிறைந்த தெற்கு புறம் பார்த்த ஏழை குடிசை ஒன்றில் தான் அவருடைய தந்தைக்கு முதல் மகனாய் பிறந்தார் என் தந்தை.
அவரின் போதாத காலம் சிறு வய்திலேயே பாட்டி பரலோகத்துக்கு போய்விட்டாள்.
புழுதி தூற்றும் வெயில் காலத்திலும், கண் மறைக்கும் பணி காலத்திலும் இருட்டிய பின்பு விளக்கெடுத்து பார்க்கும் கூன்விழுந்த வயதான கிழடுகளை நம்பி கிடந்த மருத்துவ வசதியில்லாத என் கிராமத்தின் அன்றைய சூழலில் என் பாட்டிக்கு ஐந்தாம் பிரசவம்.
மருத்துவச்சிக்காக வண்டிகட்டி பறந்தது க
நனைந்த மழை-வித்யா
அன்றைய மழையின் வண்ணங்கள் வரைதல் பொருட்டு விசும்பிக் கொண்டிருந்தது தூரிகை. மழையின் கால்கள் பால்வீதிக் கடக்கும் போது அக்கவிஞனின் தொலை நோக்குப்பார்வையைக் கண்டு சிலிர்த்துக் கொண்டது. கொஞ்சம் கவிக்குள் எட்டிப் பார்த்து...... முன் வியந்தது....பின் முறைத்தது அதன் பின் சிரித்தது.
துளிகளின் உரசலில் யுகங்கள் தேய்ந்திடக் கூடுமென இடைவெளி விட்டே வந்தடைகிறது இம்மழை ... தூரிகையின் வாசத்தில் அத்துளிகளின் தனித் தனிப்பால்வீதிகள் மணந்து கொண்டே. ம