Jayaraj Reddy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jayaraj Reddy |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 9 |
சித்திரை பிறந்தது செங்காலையில் !!
நித்திரை கலைந்து நானும் ஒரு
முத்திரை பதிக்க நினைத்தேன் !!
சித்திரமே உனைத்தேடி !!
ஏனென்றால்......
வருடத்தின் முதல்நாளில்
வஞ்சியவள் முகம் கண்டால்
பருவத்தின் பசி அடங்கும்...என்
உருவத்தில் புத்தொளி பிறக்கும் !!!
என எண்ணி
எதிரில் நீ இல்லை என்றாலும்
கதிர்வீசும் உன் கண்கள் காண
கைகளால் என் கண்கள் மூடி,,பின் திறந்து
கன்னி உன் உருவம் கண்டேன் !!!
இது போதும் எனக்கு
இந்த வருடம் வரை !!
கதிரவன் சாட்சியாக
இரு கைகள் இனைந்து
இதயம் ஒன்று என்றன !!!
மலரும் உன் புன்னகை
வழி மொழிந்த என்னை
மௌனமாய் ஆமோதித்தன !!!
எழுதினேன் என்னவளின் பெயரை
அருகினில் என் பெயரும் சேர்த்து..
பயந்தேன் கடலலை அழித்திடுமோ என்று
பாவையவள் சொன்னாள்.....
இதயத்தில் எழுதிய பெயரை
இக்கடல் என்ன செய்துவிடும்?
புருவத்தை கொஞ்சம் உயர்த்தி
போட்டாளே ஒரு போடு !!
உருகிப் போனேன் அவளன்பில்
உரிமையோடு அனைத்துக் கொண்டேன் !!!!