உருகிப் போனேன் அவளன்பில்

எழுதினேன் என்னவளின் பெயரை
அருகினில் என் பெயரும் சேர்த்து..
பயந்தேன் கடலலை அழித்திடுமோ என்று
பாவையவள் சொன்னாள்.....
இதயத்தில் எழுதிய பெயரை
இக்கடல் என்ன செய்துவிடும்?
புருவத்தை கொஞ்சம் உயர்த்தி
போட்டாளே ஒரு போடு !!
உருகிப் போனேன் அவளன்பில்
உரிமையோடு அனைத்துக் கொண்டேன் !!!!

எழுதியவர் : ஜெயராஜ் ரெட்டி (7-Mar-14, 9:10 pm)
சேர்த்தது : Jayaraj Reddy
பார்வை : 99

மேலே