சித்திரை பிறந்தது செங்காலையில்

சித்திரை பிறந்தது செங்காலையில் !!
நித்திரை கலைந்து நானும் ஒரு
முத்திரை பதிக்க நினைத்தேன் !!
சித்திரமே உனைத்தேடி !!

ஏனென்றால்......

வருடத்தின் முதல்நாளில்
வஞ்சியவள் முகம் கண்டால்
பருவத்தின் பசி அடங்கும்...என்
உருவத்தில் புத்தொளி பிறக்கும் !!!

என எண்ணி

எதிரில் நீ இல்லை என்றாலும்
கதிர்வீசும் உன் கண்கள் காண
கைகளால் என் கண்கள் மூடி,,பின் திறந்து
கன்னி உன் உருவம் கண்டேன் !!!

இது போதும் எனக்கு
இந்த வருடம் வரை !!

எழுதியவர் : ஜெயராஜ் ரெட்டி (14-Apr-14, 9:57 pm)
சேர்த்தது : Jayaraj Reddy
பார்வை : 105

மேலே