கவிதைனாலே பொய்தானே.!
கற்பனை உவமையின் கலப்பு.!
கொள்ளையன் போலீச துரத்துறான். நம்ம வீட்ல தஞ்சம் புகுந்த போலீச கொள்ளையன் விசாரிக்கும் போது காட்டி கொடுக்காம தெரியல்ல.. இந்தபக்கமா ஓடுனாருனு பொய் சொல்லி காப்பாத்துனா அது நன்மைதானே.?
அதுக்காக திருப்பி போலீசு கொள்ளையனை துரத்தும்போது சொன்னா.. ஹி..ஹி..ஹி..!
காதலா..
நவீன கால ஒரு
பொழுது போக்கு.!
ஆனால் காதல் சாவுதான்..
காதலிச்சா சொந்தகாரன் கொல்றான்.. கேட்டா சாதிகாதலாம்.!
கட்டிக்கிட்டா பொண்டாட்டியே கொல்றா..! கேட்டா கள்ளகாதலாம்.!
16-Dec-2017 9:50 pm
முதற் கேள்விக்கு ஒரு பட்டியல் தந்துவிட்டீர்கள் .
இவைகளைப் படித்தால் தமிழ் ஏன் அமுது என்று புரியும்.
ஏற்கிறேன் .
பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன்
புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன்
காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா ?
இதற்கு யார் பதில் சொல்வது குமரி அறிஞரே !
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல் ----குயில் பாட்டு
பாரதியும் இப்படி சொல்லலாமா ?
15-Dec-2017 6:03 pm
அறிஞருக்கு வணக்கம்.
சீறாபுராணம் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
*****
கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:
கம்பசித்திரம்
கம்பநாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
நூல் அமைப்பு:
காண்டம் = 6
படலம் = 118
மொத்த பாடல்கள் = 10589
முதல் படலம் = ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்:
பால காண்டம்
அயோத்தியாகாண்டம்
ஆரண்யகாண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்தகாண்டம்
ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்
****
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லி புத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து இயற்றியது 'நல்லாபிள்ளை பாரதம்'.
****
இராவண காவியம் ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.
***
ஆம்..
இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும்.
*****
அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை நான் கணினியில் நகல் எடுத்து வைப்பதுண்டு. அதுதான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும்.!
நட்புடன் குமரி.
13-Dec-2017 6:15 pm
எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும்
கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது
அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்...
அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது..
உண்மையான எதார்த்தமான படைப்பு...
வாழ்த்துக்கள் நண்பரே
பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐
அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm