வானம்பாடி முஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வானம்பாடி முஜா
இடம்:  நிந்தவூர்
பிறந்த தேதி :  21-Feb-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-May-2020
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் "வானம்பாடி (முஜா)"-"தூரிகைக் காதல் " தான் விலாசம்.
என் மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால் உருவம் கொடுத்துப் பார்ப்பவள் நான்...!!

அதனால் தான் காகிதங்கள் எனக்கும் வசப்பட்டது,..
வார்த்தைகள் வரிக்குள் சிறைப்பட்டது... !!

எழுதுகோல் கூட
என்னை உருக்கி
உங்களை உயிராக்குகிறது
தன் கவிதைகளில்...!!

என் வேண்டுகோள் எல்லாம்
ஒன்றே ஒன்று தான்...!!
என் வரிகளில் என்னைத் தேடாதீர்கள்...!!

என் படைப்புகள்
வானம்பாடி முஜா செய்திகள்
வானம்பாடி முஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2020 1:52 pm

வேருடன் பிடுங்கி
வேற்றுஉலகில்
பிரிதொரு மண்ணில்
நட்டு வைத்தனர்
காதல் செடியினை

பூவே இல்லாமல்
பூத்தொடுக்கிறாள்
தன்னைப் புரட்டி போட்ட
புனித காலத்தை
புன்னகையாள் வரவேற்ற படி

பட்டுப்போன
மொட்டு போலக் கிடந்த
பட்டாம்பூச்சியென்று
அவள் புன்னகை பட்டதும்
பட்டுச்சேலை கட்டியது
தானும் சிறகடிப்பேனென்று

முட்கிரீடம் சுமந்து
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்தன
இவள் வீட்டு விருந்துக்கு

ஒதுக்கப்பட்டவர் உதிர்க்கும்
சிறு புன்னகையின்
சிதைவடைந்த உயிர்கூடுகளின்
தூதுவனாய்.

உதிர்ந்து உரமாகிய அவள்
தளிர்களின் சாபத்தால்
உரமெல்லாம் உயிர் தரித்து,
தழைத்துத் தலையாட்டும்
மலராய் தலைதழுவக்
காத்திருக்கின்றன

மேலும்

வானம்பாடி முஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2020 1:48 pm

ஒரு கவிதையின்
சாரலில்
உறங்க
முயற்சிக்கிறேன்!

மனம் துளைக்கும்
மாய வண்டாய்
உன் கானங்கள்

எங்கனம் தூங்குவது....??

குளிர்ந்து இறங்கும்
மழைக்காற்றுடன்
சல்லாபிக்கும்
ஆனந்த கூத்தை
யாசிக்காமல்.

காற்றை தூதனுப்பி
காத்திருக்கிறேன்
காதுகளைத் தாலாட்டும்
இரவின் மடியில்

ஒரு இசைமழையின்
நினைவாய்
இந்தக்கவிதை நிற்கலாம்
என்ற நப்பாசையில்.

வானம்பாடி (முஜா)

மேலும்

வானம்பாடி முஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2020 1:44 pm

மேகத்திரைக்குள்
காதல் கல்லுண்ட
காலத்தின்
கண்ணாமூச்சியை
கண் திகட்ட காண்கிறேன்..

உயிர்களின்
ஊனமான ஓசை
தயங்கித் தயங்கி
தலைகாட்டும்
வானவில்லாட்டம்

வண்ண ஒளிக்கீற்றுகள் எல்லாம்
விழுந்துசிதறும் விரிந்த
காலமெனும் நதியின் முன்
கலந்தோடி கரைந்தே போக

பௌர்ணமி போன்று
தொடங்கப்பட்டு
தேய்பிறையாய் நிறுத்தப்பட்ட
உறவுகள் முழுதும்

முக்குளித்து மூச்சுத்திணறி
முகவரிகள் தொலைத்து
கண்ணயர்ந்தே களைத்தாலும்
சில தடையங்கள்
நிறம் மறவாமல் தானிருக்கும்

நனையத் தேவை இல்லை
அயர்ந்த கால்களை
அரவணைத்துப் பரிசளிக்கும்
அழகிய கிளிஞ்சல்களை
காலமெனும் நதியின் அலைகள்

வானம்பாடி (முஜா)

மேலும்

வானம்பாடி முஜா - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2017 2:31 pm

எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,


பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!

அந்த மகிழ்ச்சியான செய்தி : 

எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.

போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.

காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.

இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.

மகிழ்ச்சிதானே!

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மகிழ்வே.. ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் 08-Aug-2020 1:29 pm
மகிழ்வான செய்தி ஆனாலும் கசப்பாக இருக்கிறது. என்னடா இப்படி சொல்றான் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீங்க. போட்டிக்கு நூறு இல்லை ஆயிரம் படைப்புக்கள் வரும் என்பது உறுதியான வெளிப்பாடு ஆனாலும் அந்த ஆயிரத்தில் ஒன்றுக்காவது பத்து தோழர்களின் வெகுமதியாக கருத்துக்கள் கிடைக்குமா என்பதில் விடையும் கேள்விக்குறி தான். நீண்ட காலங்களின் பின் எழுத்து தளத்தால் இப்போட்டி நடாத்தப்பட இருப்பது இன்பமான அறிவிப்பு. ஆனாலும் அதை விடவும் நீண்டகாலமாக நிலவும் நான் சொன்ன பற்றாக்குறை நீங்கி ஓர் ஆரோக்கியமான போட்டியாக இது அமையுமா என்பதில் மீண்டும் அதே கேள்விக்குறி தான்.இங்கு அற்புதமான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்துக்களும் போட்டி போட வேண்டும் ஆனால் பொறாமை கொள்ளக்கூடாது. சிந்தனை நீர்விழ்ச்சியில் கருத்து அருவிகள் சமுத்திரம் போல் பெறுக வேண்டும். வெகுமதிகள் யாவருக்கும் இல்லையென்றாலும் மனத்திருப்தி ஒவ்வொரு படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லோரும் கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாவருக்கும் வாழ்த்துக்கள் தவறாக நான் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் என்னை மீறி ஏதும் தவறாக பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும். 26-Sep-2017 5:59 pm
வானம்பாடி முஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2020 6:39 am

காலியான தட்டுகளையும்
வெறுமையான குவளைகளையும்
நிரப்பும் முயற்சிகளில் நிறைந்திருக்கிறாயா?

பாவம்.... !!
பரிதவிக்கும் வறுமையில்
மண்சோறுண்டு தன்மானம் காக்கும் உள்ளங்களையும் உன்னருகில்
அமர்த்திக் கொள்.. !!

வறுமையை வசந்தமாக்கு
எப்பொழுதும்
உன் நிழலில் இளைப்பாற
கொஞ்சமேனும் இடம் கொடு
அவர்களுக்கும்..!!

ஏழ்மையில்லா நிம்மதியான
வாழ்க்கையை கேட்டுப்பெற
கூச்சம் கொண்ட இதயத்திற்கு
ஒரு குவளைப் பிரியத்தையாவது
அள்ளிக் கொடு...!!

தேவைகள் தேவைப்படும் போதே
தீர்க்கப்பட வேண்டும்.... !!
தனக்கென மட்டுமே சேமித்து
எதைச் சாதிக்கப் போகிறாய் மானிடா..!!

போதுமென்ற மனப்பாங்கும் பகிர்ந்து

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே