பசியாற பகிர்ந்துண்ணுவோம் வா
காலியான தட்டுகளையும்
வெறுமையான குவளைகளையும்
நிரப்பும் முயற்சிகளில் நிறைந்திருக்கிறாயா?
பாவம்.... !!
பரிதவிக்கும் வறுமையில்
மண்சோறுண்டு தன்மானம் காக்கும் உள்ளங்களையும் உன்னருகில்
அமர்த்திக் கொள்.. !!
வறுமையை வசந்தமாக்கு
எப்பொழுதும்
உன் நிழலில் இளைப்பாற
கொஞ்சமேனும் இடம் கொடு
அவர்களுக்கும்..!!
ஏழ்மையில்லா நிம்மதியான
வாழ்க்கையை கேட்டுப்பெற
கூச்சம் கொண்ட இதயத்திற்கு
ஒரு குவளைப் பிரியத்தையாவது
அள்ளிக் கொடு...!!
தேவைகள் தேவைப்படும் போதே
தீர்க்கப்பட வேண்டும்.... !!
தனக்கென மட்டுமே சேமித்து
எதைச் சாதிக்கப் போகிறாய் மானிடா..!!
போதுமென்ற மனப்பாங்கும் பகிர்ந்துண்ணும் மனமுமே
அடுத்தவன் வீட்டிலும்
அடுப்பெரிக்க உதவும்
ஒரே ஒரு தீப்பொறி... !!
-வானம்பாடி (முஜா)-