உதிர்ந்து போன புனிதங்களைக் கண்டுபிடி
பாவ மூட்டைகளைச் சுமந்து கூனிக்குறுகிப்போன முதுகுகளே..!!
கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்
உங்கள் சுருக்குப் பைகளை ....!!
அழுக்கில் கனத்த மூட்டைகளைக்
கொஞ்சம் இறக்கி வைக்க
நொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்..!!
பாவத்தின் சுவடுகளை அழிக்காது எச்சில்பட்ட முதுகோடு
ஊனமுள்ள மனிதனாகவா
இந்த உலகைவிட்டு
மறையப் போகிறீர்கள்..!!
ஊழ்வினையில்
இளைப்பாறிக் கொள்ள
விதைத்து விட்டு மடியுங்கள்
விலைக்கு வாங்க முடியா
புண்ணியங்கள்
பலதையும்...!!
மாற்றுவோம்..!! மாறுவோம் ....!!
மனிதனைப் புனிதனாக்கும்
பாவமன்னிப்பு...!!
-வானம்பாடி (முஜா)-