ஏழையின் சூளுரை

கடல் அலையாய் எனை அடிக்க

கரைந்து விடும் கரைமணலென

கணித்தாயோ எங்களையே....

காட்டாற்றில் கரை கடக்கும்

கட்டுமரம் நாங்களடா....

காற்றற்று ஆனாலும்

கட்டவிழ்த்து போனாலும்

உணர்விழந்து நின்றாலும் - எம்

உதிரமது உறைந்தாலும் - உம்

பண வர்க்க அலையினாலே - எம்

பசி வயிற்றில் அடித்தாலும் - உம்

தாளை வணங்கி நின்ற போதும் எமை

ஏழை என்று அறைந்தாலும் - எம்

கரமதனை துடுப்பாக்கி

உரமாய் எமை உரித்தாக்கி...

உதைத்தெழுவேன் உனையே - எம்

தோணியெனும் ஏணியிலே - நல்

தோன்றலாவேன் இப் பாணியிலே

பசி என்னும் பிணியதுவும்

திசையிழக்கும் அந்நாளினிலே

பண வர்க்க கொடுமையதும்

பறந்து போகும் இப் பாரினிலே .....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (9-May-20, 10:31 pm)
பார்வை : 117

மேலே