துப்பு பெறா உப்பு
கூலிளம் கூலிளம் கூலிளம். காய்
முத்துடன் செம்பவ ளம்கடல் மூழ்கவரும்
வற்றிடும் நீரெலாம் நற்கரிப் பாம்தெரியும்
மொத்தவுப் பும்கடல் கொடுத்த உணவுப்பாம்
எத்தனை பாடுவுப் பத்தனை வற்றிவார
அத்தனை நல்பவ ழத்துடன் ஆணிமுத்தை
பத்தரும் தங்கநி கர்விலை சொன்னாரே
சொத்தைகோ ணல்பவ ளம்விலை உப்புகாணா
செத்திடா உயிர்நிறுத் துமுப்பின் நிலைபாரே