இளந்தமிழ் இளவரசி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளந்தமிழ் இளவரசி
இடம்:  காங்கயம்
பிறந்த தேதி :  09-Jul-1999
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Aug-2019
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  4

என்னைப் பற்றி...

அஞ்சாத எழுத்து🔥

தமிழால் தீட்டப்படுகின்ற எழுத்தாயுதம் கொண்டு பயணிக்கிறேன் முடிவற்றப் பாதையில்.....................

இயற்கையை ரசி
இயலாதோர்க்கு இரக்கப்படு
கொடுமை கண்டு கோபம்கொள்
குமுறலே கவிதையாகும் 🔥
-இரா. கதிர்வேல் ஐயா 🙏எம் தமிழ் ஆசிரியர் 🤩

என் படைப்புகள்
இளந்தமிழ் இளவரசி செய்திகள்

💧#நீரின்றி அமையாது உலகு 🌏


நீரின்றி
அமையாது உலகம் 
அந்த 
காரின்றி 
கரையுமா தாகம்? 

மரமின்றி 
பொழியுமா மேகம்? 
ஈரமின்றி 
முளைக்குமா மரம்? 

சாவும் தருவாயிலா 
யாவும் நீரென 
யாத்திரை போவது? 

எச்சரிக்கை !
மானுடா! எச்சரிக்கை!

நீர் வார்த்த 
உபாயக் குழாய்கள் 
நீர் நீத்து 
அபாயக் குரலில்
அனலாய் மொழிவது காணலயா?

மரம் 
நடவே...
நீரில்லாது போவதற்குள் 
மரம் 
நட்டு வளர்த்திடு! 

உணவுக்கு மாத்திரை
உருவாக்கிய மானுடா?
நீருக்கு மாத்திரை 
நீ தயாரிக்க முடியுமா..?

நீரை விற்று
பணமாக்கும் மனிதா? 
உன் 
பணத்தைப் பிழிந்தால் 
நீரென்ன ஒழுகுமா? 

நீ
திருந்தாது போயின் 
நெருப்பிலிருந்து ஒழுகும் 
நீரும் வற்றிவிடும் 

பணத்துக்கு 
வட்டியும் வரியும் 
வரம்பின்றி செலுத்துகிறாய்

நீ வெட்டிய 
மரத்துக்கு...? 

கடன்கார மனிதா...! 
கண்விழி! 

பணவங்கி போல
மர வங்கி தொடங்கிடு! 

நீ
வெட்டும் மரத்துக்கு 
வட்டியோடு சேர்த்து 
நட்டிடு மரத்தை...! 

இந்த 
கடனுக்கு 
எந்தக்
கட்சிகளின் வாக்கிலும் 
தள்ளுபடி இல்லை 

தாரளமாக 
நட்டிடு மரத்தை!

           இளந்தமிழ் இளவரசி  
💧🌱🌳🍀🌧🌏💧

மேலும்

இளந்தமிழ் இளவரசி - சிவமணி பரசுராமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2019 9:49 pm

சிலையின் இறுதிநிலை முடிந்த பிறகு கண் திறப்பால் சிற்பி அவள்,

குழந்தையின் முதல்நிலை வகுப்பிலேயே அறிவுக்கண் திறக்கும் சங்கர தேவி இவர்.


எந்த செல்வம் கொடுத்தாலும் இன்று அளவில் தீர்வு உண்டு!


குன்று அளவு கொடுத்தாலும் இன்றளவும் குறையாத செல்வத்தை குழந்தைகளுக்கு அளிக்கும் துர்க்காதேவி இவர்!

பள்ளியில் குழந்தைகளை தரவரிசையில் சீர்செய்து தக்கபடி ஏற்படுத்தி அறிவு எனும் நீர் பாய்ச்சி வானளவு உலகத்தையே கைக்குள் அடக்கி விட முயற்சிக்கும் கள்ளமில்லா உன் சிரிப்பிற்கு மழலை குழந்தைகள் கொடுக்கும் நன்றி என்னவோ தெரியவில்லை?

மேலும்

இளந்தமிழ் இளவரசி - இளந்தமிழ் இளவரசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2019 5:27 pm

நிழல்கள்

இருளில்
இருக்கையில்
தேடினேன்
காணவில்லை

வெளிச்சத்தில் வந்து
ஒட்டிக் கொண்டது

பிறகு தான் புரிந்தது
நிழல்கள்
அப்படித்தான் என

மேலும்

இளந்தமிழ் இளவரசி - இளந்தமிழ் இளவரசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2019 6:41 am

சுதந்தரம்

இன்று
கூந்தலையும்
பூக்களையும் கூட
சிறை செய்வதில்லை
பெண்கள்...
என்னவொரு நீதி
என் நாட்டில்... !

மேலும்

இளந்தமிழ் இளவரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2019 6:41 am

சுதந்தரம்

இன்று
கூந்தலையும்
பூக்களையும் கூட
சிறை செய்வதில்லை
பெண்கள்...
என்னவொரு நீதி
என் நாட்டில்... !

மேலும்

இளந்தமிழ் இளவரசி - இளந்தமிழ் இளவரசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2019 6:33 am

உடை

மானம்
காத்தவனை
துவைத்து
தூக்கில் அல்லவா
தொங்க வைக்கிறோம்..

மேலும்

இளந்தமிழ் இளவரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2019 6:33 am

உடை

மானம்
காத்தவனை
துவைத்து
தூக்கில் அல்லவா
தொங்க வைக்கிறோம்..

மேலும்

இளந்தமிழ் இளவரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2019 5:46 pm

தீர்வு

சாக்கடையை மூடாமல்
மூக்கை மூடுகின்றன
மூவாயிரம் கைகள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே