Rathnakishore - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Rathnakishore |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 1 |
என் நீண்ட இரவுக்கு
வழித்துணையாய் வா
நடு வானில் இருக்கிறது நிலா.
நீ என் அருகில் இருந்தால்போதும்
சொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.
உன் கையில் களிமண்ணாய் நானிருந்தபோது
என் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்.
உன்னை மீண்டும் மீண்டும் நெய்து
நான் கிழிந்துபோகிறேன்.
என் கண்ணீர் பருகி வளரும்
பூச்செடி நீ.
உன் பருவத்தில் பூக்களை விதைத்தவன்
என் பார்வையில் முட்களை விதைத்திருக்கிறான்.
உன் விழிமெழுகில் விழத்துடிக்கும்
விட்டில் நான்.
எச்சரிக்கை ஏதுமில்லா பல வளைவுகள் கொண்ட சாலை நீ விழிகளால் பயணித்து விபத்தானவன் நான்.
உன் மார்பில் ஒளிரும் மச்சத்தைவிடவா
பொன்வானில் நிலா ஒளிரப்போகிறது
இன்னாரு மகனா
என்று ஆரம்பித்து
காலகாலத்துக்கும்
பொழச்சுக்கெடக்கனும்டா
என்று நமக்காக
காவல் தெய்வங்களை
வேண்டிக்கொள்ளும்
இந்த
ஊர்பெருசுகள்
உயிரோடிருக்கவேண்டும்
அடுத்தமுறை
நான் ஊருக்குவரும்போதும்.
நிலாகண்ணன்
பூக்களையே
பாடிக்கொண்டிருப்பதால்
நமக்கும் வாடும்
தன்மை வந்துவிடுகிறது.
ஏழு நிறத்தையும்
காட்டிவிடுவதில்லை
எந்த வானவில்லும்
நிராகரிப்புகளைத்
தாங்கிக்கொள்ளாத இதயம்
வெறும் நினைவுகளை
தன் நிலங்களில்
விதைக்கிறது
வேர்கள் வெளியேயிருந்தால்
கிளைகள்
தழுவிக்கொள்ளக்கூடும்.
எந்த ஒப்பனையுமின்றி
உடலை நிர்வாணமாக
எடுத்துச்செல்லுங்கள்
அதுதான்
மரணத்தின் சாராம்சம்.
ஒரு நாள்
நிறங்களின் பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொள்ளும்
ஓவியங்கள்.
நீங்கள் சிறகுகளை
சிலிர்த்தபடி
சிகரங்களைப்பாடுகிறீர்கள்
நானோ
முன்பாதத்தை அழுத்தி ஊன்றியவாறு பள்ளத்தாக்குகளைப்பாடுகிறேன்.
பேனாவின்
மை
நான்..
காதுகேளாத..
வாய்பேசமுடியாத ஊமை....
எனவும்.....
இந்த..
இடத்திலிருந்து வருகிறேன்...
எனவும்......
தன்னிலைவிளக்கம்
எழுதியிருந்த..
அட்டையை என்னிடம்..
கொடுத்துவிட்டு..
என் குழந்தையின்..
கையிலிருந்த..
வெள்ளரிப்பிஞ்சுவையே...
வெறித்துக்கொண்டிருந்த...
அந்த சிறுவனுக்கு...
வாயையும்..
செவியையும்விட..
அதிகமாய்..
வலி தந்துகொண்டிருந்தது..
அந்த..
அட்டையில் குறிப்பிடாத..
அவன் கண்கள் ..!
என் பசிக்கு உணவு குடுத்து உன் வயிறாய் பட்டினி போட்டு உன் கைகள் எங்கோ அம்மா...
உன் கை பீடிதே நடந்த என் பள்ளி பருவ காலங்கள் திரும்ப வருமா அம்மா...
என்னை தூங்க வைத்து நீ கண் வீழிதீருந்த இரவுகள் வேணும் அம்மா....
தூங்கும் போது உன் முந்தானை பிடித்து தூங்கிய என் இரவுகள்
இன்று உன் கரம் தேடி விசும்பும் சத்தம் உன் கல்லறையில் கேட்குதா அம்மா....
நீ இல்லாத இந்த உலகில் எனக்கு வாழ தெரியவில்லை அம்மா....
அன்று கருவறையில் இடம் தந்த நீ இன்று உன் கல்லறையில் இடம் தருவாயா அம்மா........