வலி

நான்..
காதுகேளாத..
வாய்பேசமுடியாத ஊமை....
எனவும்.....
இந்த..
இடத்திலிருந்து வருகிறேன்...
எனவும்......
தன்னிலைவிளக்கம்
எழுதியிருந்த..
அட்டையை என்னிடம்..
கொடுத்துவிட்டு..
என் குழந்தையின்..
கையிலிருந்த..
வெள்ளரிப்பிஞ்சுவையே...
வெறித்துக்கொண்டிருந்த...
அந்த சிறுவனுக்கு...
வாயையும்..
செவியையும்விட..
அதிகமாய்..
வலி தந்துகொண்டிருந்தது..
அந்த..
அட்டையில் குறிப்பிடாத..
அவன் கண்கள் ..!