ஷண்முகம் ஆ - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஷண்முகம் ஆ
இடம்:  VELLORE
பிறந்த தேதி :  05-Apr-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Mar-2018
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் அமைப்பியல் துறையில் பட்டயம் பெற்றுள்ளேன் . நான் தற்போது வாணியம்பாடி நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணி ஆற்றி வருகிறேன் . தமிழில் எனக்கு ஆர்வம் உண்டு . ஆனால் பணியின் காரணத்தினால் தமிழ் துறையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனது . இப்போது இந்த வெப் சைட்டில் இணைய வாய்ப்பு கிடைத்தது . மிக்க மகிழ்ச்சி .

என் படைப்புகள்
ஷண்முகம் ஆ செய்திகள்
ஷண்முகம் ஆ - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2018 4:33 pm

இரு மனங்களை ஒன்றாக்கிய பந்தம்
இரு திசையில் பிரித்துவிட
கடந்த காலத்தின் நினைவுப் பத்திரமாய்
நிகழ்காலத்தின் துயரமாய்
எதிர் காலத்தின் வினாக்குறியாய்
சட்டம் தீர்ப்பெழுதிய சான்றிதழ்
விவாகரத்து.

மேலும்

விரைவான நம்பிக்கை அதை விட விரைவான துரோகமாகி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Mar-2018 6:46 pm
சமூகத்தின் சிந்தனையும் பார்வையும் மாறினால் நிகழ்காலமும் எதிர்காலமும் நன்றாகவே அமையலாம்... 14-Mar-2018 8:31 pm
சட்டம் தந்த சான்றிதழ் முடிவாய் அமையாமல் இன்னொரு நல் துவக்கமாய் அமைந்திட்டால் அதுவே நற் சான்று மடல் 14-Mar-2018 7:21 pm
ஷண்முகம் ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2018 7:12 pm

இனிய கனவுகள் இரவதினில் காண
வண்ண வாழ்த்துக்களை வரிந்துதான் கூறியே
பண்ணிய நாட்கள் பறந்துதான் போச்சே
உறவுகள் இல்லை உறுதியாய் தெரிந்தது
பின்னே ஏதோ பிணைப்புகள் உள்ளதாய்
மறை பொருள் வார்த்தைகள் மறைந்துதான் போச்சே
தேடாத வார்த்தைகள் தானாகத்தான் வந்து
உறக்கத்தை தான் கெடுத்து கனவுகளை பறித்து எடுத்து
தினம் தினம் காணாமல் போய்க்கொண்டிருக்கும்
என் கனவு தேவதையே
கனவுகள் காண கண்ணுறக்கம் வந்தால் தானே
காலங்கள் கூறட்டும் எட்டா நிலையினிலே
ஏன் வந்தாய் நீ என்று
வெட்ட வெளிச்சமாய் உண்மை இதுவென்று
பட்டறிவு பகர்ந்தாலும் பாழும் மனமது
பரிதவிப்பு கொள்ளுதே
கானல் நீர் காட்சி இவை
பகல் கனவு காலம்

மேலும்

சரி... நம்பிவிட்டேன்...காதல் என்ற ஒன்றினை இருக்கிறது என்று நம்பும்போது.... 15-Mar-2018 11:16 pm
ம்ம் ..இருக்கிறது ... 15-Mar-2018 11:10 pm
அழகு .... 14-Mar-2018 9:53 pm
அருமை...இந்தக் காலத்தில் கூட ஒரு தலை காதல் இருக்கிறதா? ஆஹா... 14-Mar-2018 7:18 pm
ஷண்முகம் ஆ - ஷண்முகம் ஆ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2018 3:49 pm

வான் எனும் தாய் அவள் வையக குழந்தைக்கு வழங்கிடும் தாய்ப்பாலோ வான்துளி

மேலும்

மிக்க நன்றி ஐயா 14-Mar-2018 6:43 pm
உங்கள் பதிவேற்றம் பற்றிய கேள்விக்கு பதில் எழுதுவதாக இருந்தேன் கவிதை பதிவேற்றி விட்டீர்கள். இனி சொல்லத்தேவையில்லை . ஷண்முகம் நின் கவிமுகம் கண்டு என் மனம் மலர்ந்தது ஆறுமுகத்து அய்யா ! ஒரு வரியாயினும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள் . வானில் தொடங்கி வானில் முடித்திருப்பது அழகு . நீங்கள் யாப்பில் எழுதலாம் வானெனும் தாய்வை யகக்குழந் தைக்கு வழங்கும்தாய்ப் பால்வான் துளி ----உங்கள் வரி அப்படியே குறள் வெண்பாவாக. வாழ்த்துக்கள் . 13-Mar-2018 8:22 am
வெள்ளிக்கம்பிகள் போல தூவும் வானிலை நிலவிற்கு நிலத்திற்கும் ஒரு பாலம் போடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 5:41 pm

ஷண்முகம் ஆ - எண்ணம் (public)
12-Mar-2018 3:27 pm

என்னுடைய கவிதை பதிவேற்றம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே