கனவு வலி

இனிய கனவுகள் இரவதினில் காண
வண்ண வாழ்த்துக்களை வரிந்துதான் கூறியே
பண்ணிய நாட்கள் பறந்துதான் போச்சே
உறவுகள் இல்லை உறுதியாய் தெரிந்தது
பின்னே ஏதோ பிணைப்புகள் உள்ளதாய்
மறை பொருள் வார்த்தைகள் மறைந்துதான் போச்சே
தேடாத வார்த்தைகள் தானாகத்தான் வந்து
உறக்கத்தை தான் கெடுத்து கனவுகளை பறித்து எடுத்து
தினம் தினம் காணாமல் போய்க்கொண்டிருக்கும்
என் கனவு தேவதையே
கனவுகள் காண கண்ணுறக்கம் வந்தால் தானே
காலங்கள் கூறட்டும் எட்டா நிலையினிலே
ஏன் வந்தாய் நீ என்று
வெட்ட வெளிச்சமாய் உண்மை இதுவென்று
பட்டறிவு பகர்ந்தாலும் பாழும் மனமது
பரிதவிப்பு கொள்ளுதே
கானல் நீர் காட்சி இவை
பகல் கனவு காலம் இவை
மாறித்தான் போகும்
மறக்கத்தான் வேணும்
முறையற்ற வினாக்கள் இவை
முடியத்தான் வேண்டும்
கனவுகள் முடியத்தான் பார்க்க
காலன் அவன் கூற்று
கட்டாயம் எடுத்துஉறைக்கும்
அது வரை ................. !!!!

எழுதியவர் : ஆ . ஷண்முகம் (14-Mar-18, 7:12 pm)
Tanglish : kanavu vali
பார்வை : 2595

மேலே