தமிழன் தெட்ச் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழன் தெட்ச் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 20-Feb-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-May-2017 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 16 |
கவி எழுதி
சுற்றித் திரியும் எலக்ட்ரான்களாய் என்னை, அவள் விழிக்கரு நோக்கி ஈர்க்கிறாள்...
கதிரவன் என்னை மையமாகக் கொண்ட, அவள் விழிக்கோளத்தின் சுற்றுப்பாதை, என்றும் என்னை விட்டு நீங்காதவட்டமாகும்,
கண்ணெதிரேத் தோன்றி கானகமயிலாய் ஆடிய வண்ணம்,
காதருகே வந்து நின்று சில கவிதைகள் சொல்லிய வண்ணம்,
சற்றுமுன் மறைந்து,
என் நெஞ்சுல்லே ஊடேறி தம் நினைவுகளைத் தந்த வண்ணம் இருக்கிறாள்;
#காதலி
நியூட்டன் ஒளி துகள் ஆகப் போகிறது என்றார், மேக்ஸ்வெல்லோ அலையாகப் போகிறது என்றார்,
ஒளி துகளாகப் போகிறதா இல்லை அலையாகப் போகிறதா என்று எனக்குத் தெரியவில்லை,
நிச்சயம் உன் முகத்தில் பட்டு பிரதிபலித்து என்னை இரை ஆக்கப் போகிறது என்பதை மட்டும் நான் அறிவேன்!
உன்னிளம் காந்தப் பார்வையால்
என் முழு கவனத்தையும் ஈர்த்தவளே...
கள்ளம் கபடமின்றி தினம் பேசியே
நெஞ்சில் காதலை நிரப்பியவளே....
உன்னால் இன்று
தன்நிலை மறந்து
தெளிவற்றுக்கிடக்கிறேன்....
உன்னைக் கண்ட போதையில்...
நீ வரும் பாதையில்....
அழகே...
காணும் கண்களையெல்லாம் மயக்கி
தெளிவாக திரியும் நிலவே...
உன் முகவரிதான் என்ன?
செவ்வாய் திறந்து சொன்னால்...
காதல் கவிதை வரைந்து அனுப்புவேன் நானும்....!
நீதான் எனக்கு துணையாக வேணும்...
அவள் கண்களில் காதல் மின்னோட்ம்!
இதழ்களில் தேடல் அலைவரிசை!
எங்கள் மனதின் அலைநீளமோ தூரமில்லை!
அதிர்வெண்ணுக்கு ஒன்றும் குறைவுமில்லை!
மின் திருத்தி கொண்டு நேர்மின்னோட்டமாக உயிருக்குள் புகுந்துவிட்டாள்!
இதற்கு இடையில் அவள் அப்பன் மின்தடையாக!!
ஆக! சேர்த்து வைத்துவிட்டேன் முன்கூட்டியே எம் காதலை மின்தேக்கியாக!
வெய்யோன் ஓய்வெடுக்க நிலவவன்
கண்விழித்து சோம்பல் முறிக்கும்
அந்தி மாலை வேளை
வண்ண வண்ணப் பூக்கள்
வழிந்தோடும் நீரோடை
சில்லென்று காற்று வீச
சில்வண்டு நாதம் இசைக்க
மல்லிகை மணம் தூவ
மயில்கள் நடனம் ஆட
குயில்கள் கீதம் பாட
உன்னருகே நானிருந்து
மடி மீது தலை சாய்த்து
மகிழ்ந்திருந்தால் அது போதும்
எனை மறந்திருந்தால் அது போதும்
ஆக்கம்
அஷ்ரப் அலி
கண்மை போடும் கயல்விழியே!
உன் கார்கூந்தல் மணமறியாச் சிறுவனடீ நான்!
உன் கூந்தல் மணமறிய மறுப்பாயோ?
இல்லை, என் விரல் கோதி, இதழ் நுகரத்தான் தடுப்பாயோ?
உன் இடைக் கூட வெட்கி நானுதடீ!
என்னைக் கண்ட இன்பத்தால் செய்வதறியாது ஏங்குதடீ!
என் விரல்பட அது சிந்து பாடுதடீ!
காதல் வினையெல்லாம் அது செய்துத் துடிக்குதடீ!
இதழ்நீர் சுவையின்பம் கொடுத்துவிடு, உன் இடையிலே என்னை அள்ளிச் சேர்த்துவிடு..
என் இதயமாளிகை,
உன் வருகையினால் திறந்தது
உன் அன்பால் குளிர்ந்தது
உன் அரவணைப்பால் உருகியது
உன் சாய்வால் பலமானது
உன் ஆறுதலால் உறுதியானது
உன் பிரிவால் சருகாகி தகர்ந்தது...