காதல் கடத்தி
அவள் கண்களில் காதல் மின்னோட்ம்!
இதழ்களில் தேடல் அலைவரிசை!
எங்கள் மனதின் அலைநீளமோ தூரமில்லை!
அதிர்வெண்ணுக்கு ஒன்றும் குறைவுமில்லை!
மின் திருத்தி கொண்டு நேர்மின்னோட்டமாக உயிருக்குள் புகுந்துவிட்டாள்!
இதற்கு இடையில் அவள் அப்பன் மின்தடையாக!!
ஆக! சேர்த்து வைத்துவிட்டேன் முன்கூட்டியே எம் காதலை மின்தேக்கியாக!