எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முயற்சி

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .
முயற்சி எதற்கு வேண்டும்    வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நினைத்து அதை அடைய வேண்டும் என்று நினைத்தால்  அதற்க்கு முயற்சி அவசியம் முயற்ச்சி செய்தால் நமது குறிக்கோளை அடைந்து விட முடியுமா .
அதற்க்கு திட்டங்கள் தேவை படும் .கால நிர்ணயம் ,இடம் ,பொருளாதார வசதி ,யார் உதவி செய்ய வேண்டும் போன்ற பல காரியங்களை திட்டமிட்டு சேகரிக்க வேண்டும் .அதில் ஒவ்வொன்றின் பங்களிப்பும் எப்படி ,எவ்வளவு இருக்க வேண்டும் என்று திட்டம் இடுதல் அவசியம் 
கால நிர்ணயம் மிக அவசியம். வாழ் நாள் முழுவதும் நம் குறிக்கோளை அடைய செலவிட முடியாது .
ஆறு மாதம் ஒரு வருடம் இரண்டு வருடம் இப்படி நிர்ணயம் செய்து பணியாற்ற வேண்டும் .
ஒரு சினிமா பார்க்கிறோம் ,நன்று மோசம் என்று ஒரு நிமிடத்தில் நம் முடிவை சொல்லி விடுகிறோம்.
அனால் அதை தயாரிக்க எத்தனை பேர் உழைத்தார்கள் ,எவ்வளவு காலம் பிடித்தது ,பணம் என்ன செலவாயிற்று 
என்பதின் ஒட்டு மொத்த உருவம் தான் முயற்சி .

மேலும்

அறிமுகம் 

ஒருவன் சமூகத்தில் எவ்வாறு அறிமுக படுகிறான் .அவன் ஒரு நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான்  
என்று வைத்து கொண்டால் ,அந்த நிர்வாகத்தின் பெயரை சொல்லி அந்த நிர்வாகத்தில் அவன் வகிக்கும் பதவி 
யின் பெயரை சொல்லி அறிமுக படுத்துவார்கள் .
ஆனல் அந்த அறிமுகம் நிரந்தரமா என்று கேட்டால் இல்லை.காரணம்  அந்த வேலையை  அவன் விட்டு விட்டால் 
அவன் ஒரு வெற்று ஆள் .
இதே ஒரு விவசாயீ அல்லது சுய தொழில் செய்யும் தனி நபர்  ஆகியோருக்கு  அவர்கள் செய்யும் தொழில் அவர்களை அறிமுகம்  செய்து வைக்கும். அது தான் நிரந்தர அறிமுகம் .
இப்படி உதாரணங்கள் அடுக்கி கொண்டு போகலாம் .இந்த அறிமுகம் தான் அவனை வாழ்வின் தரத்தில் உயர்த்தி 
நிற்க வைக்கும் .
  

மேலும்


மேலே