ஹரிசாரதி- கருத்துகள்

உங்கள் கருத்தில் என் கதைக்கான வெற்றியை காண்கிறேன்... மிக்க நன்றி உங்கள் கருத்து அனைத்திற்குமே.. நான் புது எழுத்தாளனே என்னிடம் கற்க வேண்டும் என சொல்லி மிக பெரியவனாய் மாற்றிவிடாதிர்கள்... :)

முதலில் தங்கள் கருத்துக்கு நன்றி.... எவ்வளவு தூரம் இந்த முடிவு உங்களை பாதித்திருக்குமோ எழுதிய எனக்கும் அதே வலி உண்டு... சில காதலர்கள் செய்யும் தவறுகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்பினேன். அதுவும் போக நீங்கள் சொன்ன தோழி வினோதினியின் மரணத்தின் தாக்கமும் இதில் அடக்கம்... சிலர் அந்த த்ராவகம் ஊற்றிய கொடியவனுக்கு வக்காலத்து வாங்கும் விதமாய் பேசியது என்னை பெரிதும் பாதித்தது. அவள் அவனை காதல் செய்து ஏமாற்றியதால் அவன் அந்த முடிவை எடுத்தான் என சிலர் மேதாவித்தனமாய் பேசியது என்னுள் ஏற்படுத்திய வலி இது... அப்படி அவர்கள் காதலித்திருந்தால் இவ்வாறே அவன் காதலித்திருக்க கூடும்... ஏனெனில் உண்மையாய் காதல் செய்தவன் தன் காதலி தவறே புரிந்தாலும் அவளை சிதைக்க முற்படமாட்டான்.. ஆணாதிக்கம் செய்கிறோம் என தெரியாமல் சிலர் சூற்றி திரிகின்றனர்.... இதை படிக்கும் ஆண்கள் இதில் கூறும் தவறுகளில் ஒன்றையாவது செய்திருந்தாலும் அவர்கள் மீதே தவறு என உணர வேண்டும் என்பதற்காகவே இந்த படைப்பு.. இந்த பதிலில் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் தயக்கம் இன்றி கூறுங்கள் மேலும் சொல்கிறேன்... ஏனெனில் நீங்கள் எனக்கு கிடைத்த மிக முக்கியமான வாசகர்....

தங்கள் கருத்துக்கு நன்றி.... அடுத்த முறை இவ்வாறு தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்....


ஹரிசாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே