C.B.Raju- கருத்துகள்

இவர்களாக விலகிப் போகவும் மாட்டார்கள்; விலக்கவும் முடியாது. ஏனென்றால் பின்னால் இருந்து செயல்படுபவர்கள் பலம் வாய்ந்தவர்கள். அவர்களுக்குள் பங்காளிச் சண்டை ஏற்பட்டு அழிந்தால்தான் உண்டு.

ஒரே வார்த்தையில் சொல்வதானால் தேவதை. தெய்வத் தன்மை கொண்ட ஒரு பெண்.

கேள்வி நம் மனம் புண்படும்படி இருந்தால் பதில் சொல்லத் தேவை இல்லை. நம் பதிலால் பிறர் மனம் புண்படும் என்றாலும் பதில் சொல்லத் தேவை இல்லை.

வளர்ப்பது குற்றம் இல்லை. ஆனால் வெட்டுவதற்கு வனத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல ?

ஆவி, பேய் இரண்டிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

எனக்கு வயது 67. சொந்த வீடு இருக்கிறது. மகன், மகள் இருக்கிறார்கள். பணியிலிருந்து நான் ஒய்வு பெற்ற பிறகு, என் மகனின் நிழலில் நான் இருக்கிறேன். இதுதான் என் வாழ்க்கையில் நான் அடைந்த முன்னேற்றம்.

நண்பரே, என் கேள்வி மிகத் தெளிவானது. இது வரை இல்லாத இந்த மாதிரி கற்பழிப்பு செயல்கள் இப்போது மட்டும் அதிகமானதன் காரணம் என்ன? 2 நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு - 3 வயது சிறுமியை 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்திருக்கிறான். அந்த சிறுவனுக்கு இது பற்றி யார் சொல்லி இருப்பார்கள்? அந்த மாதிரியான உணர்வு அவனுக்கு ஏற்பட யார் காரணம்?

நொச்சி இலையை நெருப்பில் போட்டு, அதில் வரும் புகையைக் கொண்டு விரட்டலாம். அல்லது துளசி இலையையும் பயன்படுத்தலாம். அல்லது கொசுவலையை பயன்படுத்துங்கள்.


C.B.Raju கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே