ரகுராம் ரத்தினம்- கருத்துகள்

கோடிக் கிரணங்கள் கதிரவன் பாய்ச்சினும்,
அரை பூமிக்குத்தான் வெளிச்சம் பாயும்...
புவியாய் முயன்று சுழன்று திரும்பாவிடில்,
சமம் என ஆகுமோ இருளும் ஒளியும்,
நாளின் நிலை என மாறுமோ வெம்மையும் தண்மையும்,

ஒற்றைச் சூரியன் அன்று, இங்கோர் கொத்துச் சூரியர் புலவராய் உண்டு,
கோடிக் கிரணங்கள் அன்று இங்கு பலப்பல கோடியாய்
அறமும் பண்பும் வீரமும் ஞானப் புலமையும் உண்டு,
சற்றே முயன்று திரும்பிப் பாரீர்...
அறத்தின் கீற்று தம் அறிவில் பாய்ந்திடவே...
தமிழாய் இன்பம் சிந்தை மகிழ்ந்திடவே...


ரகுராம் ரத்தினம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே