Rangarajan Sundaravadivel- கருத்துகள்

//ஏன் இவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பாவிகளுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் குழந்தை தொழிளார்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் பாலியல் தொழிளார்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் எலியைத் தின்று தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்காக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான சிறுமிகளுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? //

இதைப் படிக்கும் போது சுந்தர ராமசாமியின் கவிதையொன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி

நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று

என்னைக் கேட்காமலேனும் இரு.

arunvaali கேரளா வட இந்தியாவில் இருக்கிறது என்று என்னை நம்ப வைத்துவிட்டார். கருத்துக் கூறுவதற்கு முன் பிரச்சினையை ஓரளவாவது அறிய முயற்சி செய்திருக்கலாம்.

அந்தத் தலைவரின் பெயரையும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

அழகு என்பது அதை ரசிப்பவரைப் பொறுத்தது.

சட்டத்துக்கும், நியாயத்துக்கும் புறம்பான பணிகளைச் செய்வதற்கும், சட்டத்திற்குட்பட்ட பணிகளை விரைவாகச் செய்வதற்கும் நாம் அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் தொகையே லஞ்சம். (எல்லாப் பணிகளுக்கும் அரசு ஊழியர்கள் லஞ்சத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் இவ்விரு விஷயங்களுக்கு தொகை அதிகமாக வசூலிக்கப்படுகிறது)

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் நமது உள்மனதிலேயே ஊறிப்போய்க் கிடக்கிறது. சிறு வயதில் வரிசையில் முண்டியடித்துக் கொண்டு போவதிலிருந்து துவங்குகிறோம். சிலருக்காக சில விஷயங்கள் செய்து அவர்களிடமிருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறோம்.

இலஞ்சத்தைப் பற்றிய எனது அனுபவங்கள் வித்தியாசமானவை.
எனது தாயார் ஒரு அரசு ஊழியர். அவர் நான்கைந்து வருடங்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலருக்கு (டி.ஆர்.ஓ) தனி உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது டி.ஆர்.ஓவை சந்திக்க ஒரு நபர் வந்துள்ளார். டி.ஆர்.ஓ அப்பொழுது ஒரு கூடுகையில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியாது என்று எனது தாயார் கூறினாராம். அதற்கு அந்த நபர் 1000 ரூபாய் நோட்டை நீட்டினார். எனது தாய் அவரிடம் அதை வாங்காமல் உண்மையில் டி.ஆர்.ஓ கூடுகையில் இருப்பதால் அவரைப் பார்க்க முடியாது என்பதை மீண்டும் விளக்கினார். லஞ்சம் என்பது அரசு அலுவலகங்களிலும், மக்கள் நடுவேயும் எவ்வளவு பழக்கமாகிப் போனது என்பதற்கு இதுவே உதாரணம்.

லஞ்சத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிலர் சொல்லுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கீழே போடப்பட்டிருந்து கருத்துகளில் எவருமே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்ததாகச் சொல்லவில்லை. இருக்கிற சட்டங்களையே பயன்படுத்தாதவர்கள் புதிய சட்டங்களை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள்? லஞ்சம் மாற அடிப்படை மனநிலையே மாற வேண்டும்.

(அமெரிக்க காவல்துறையின் லஞ்ச லாவண்யங்களைப் பற்றியும் அவற்றை எதிர்த்த தனிமனிதனைப் பற்றியும் அறிய செர்பிகோ திரைப்படத்தைப் பார்க்கவும்)



Rangarajan Sundaravadivel கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே