puthuvaipraba- கருத்துகள்

போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வருத்தங்களுடன்
புதுவைப்பிரபா

பொங்கல் கவிதை போட்டியில் பரிசு வென்ற நிலவை.பார்த்திபன், த.மலைமன்னன், கே. ரவிச்சந்திரன் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன்.


puthuvaipraba கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே