வெள்ளக்காரதுரை

Vellaikaara Durai Tamil Cinema Vimarsanam


வெள்ளக்காரதுரை விமர்சனம்
(Vellaikaara Durai Vimarsanam)

இயக்குனர் எழில் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வெள்ளக்காரதுரை.

இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபுவும், நாயகியாக ஸ்ரீ திவ்யா மற்ற கதாப்பாத்திரங்களில் ஜான் விஜய், சூரி, சிங்கம்புலி, வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜான் விஜயிடம் வட்டிக்கு நிலத்தை வாங்கி பின் அதை விற்கும் நபராக சூரி, அவரின் கீழ் வேலை பார்க்கும் இளைஞனாக விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு சூரியை மதிக்காமல் ஒவ்வொரு வேலையும் செய்கிறார். சூரி சுடுகாட்டு நிலம் வாங்கி ஏமாந்து விடுகிறார். சூரி, விக்ரம் பிரபு மற்றும் அவர்களுடன் பணியாற்றிய அனைவரையும் வட்டிக்கு பணம் கொடுத்த ஜான் விஜய் கடத்தி அடிமையாக வேலை வாங்குகிறார். அங்கு விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யாவை கண்டு காதலில் விழ ஸ்ரீ திவ்யாவும் அவரைக் காதலிக்கிறார்.

ஸ்ரீ திவ்யா யார்? என்பதையும், இருவரின் காதல் கைகூடியதா? என்பதையும், சூரி மற்றும் விக்ரம் பிரபு ஜான் விஜயிடம் இருந்து தப்பினார்களா? என்பதையும் நகைச்சுவையுடன் கலந்த பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.

வட்டி சம்மந்தமான வித்தியாசமான நகைச்சுவை காதல் கதை.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-26 14:59:00
4 (4/1)
Close (X)

வெள்ளக்காரதுரை (Vellaikaara Durai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே