மீகாமன்
Meaghaman Tamil Cinema Vimarsanam
(Meaghaman Vimarsanam)
இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., மீகாமன்.
இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஆர்யா, ஹன்சிகா மோட்வாணி, அஷுடோஷ் ராணா, ஆஷிஷ் வித்யார்த்தி , அவினாஷ், மகாதேவன், ஹரிஷ் உத்தமன், அனுபமா குமார், சஞ்சனா சிங்க் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு பெரிய சமூக விரோதி ஜோதியை பிடிக்க செல்லும் அதிகாரியில் ஒருவர் ஆர்யா. முக்கிய சமூக விரோதி ஜோதியை வெளிக்கொண்டு வர அக்கூட்டத்தில் இணைந்து அவர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் செய்கிறார், ஆர்யா. இதன் நடுவில் வெகுளித் தனமான பெண்ணாக ஹன்சிகா. ஆர்யா, ஹன்சிகா இருவரின் காதல் மலர்ந்து தொடர்கிறது. ஒரு பெரிய சமூக விரோத வேலை தடைப்பட்டு போனதால் ஆத்திரமடையும் ஜோதி, தன் கூட்டத்தில் வேறு ஒருவன் இருப்பதை அறிகிறான்?
ஜோதி, கண்டு பிடித்த நபர் யார்? என்பதையும், ஆர்யாவின் வேலை சரியாக முடிந்ததா? என்பதையும் அதிரடியுடன் இப்படத்தில் காணலாம்.
ஆர்யாவின் மாறுபட்ட நடிப்பு , தமனின் பின்னணி இசை சிறப்பு.
இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.