அமர காவியம்

Amara Kaaviyam Tamil Cinema Vimarsanam


அமர காவியம் விமர்சனம்
(Amara Kaaviyam Vimarsanam)

இயக்குனர் ஜீவா ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., அமர காவியம்.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் ஆர்யாவின் தம்பி அறிமுக நடிகர் சத்யா, அறிமுக நாயகி மியா ஜார்ஜ், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் ஆர்யாவின் அழைப்பிற்கு பிரபல நடிகைகளான த்ரிஷாவும், நயன்தாராவும் மற்ற நடிகைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அறிமுக நாயகி கார்த்திகா (மியா ஜார்ஜ்) வை, காதலிக்கும் பள்ளி பருவ நண்பனின் காதலுக்கு தூது போன ஜீவா(அறிமுக நாயகன் சத்யா)விடம் கார்த்திகா சொன்ன பதிலில் காதலில் விழுகிறார், ஜீவா. இவர்களின் பள்ளி பருவக் காதலால் குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு பின் காதலின் மயக்கத்தில் ஜீவா மற்றும் கார்த்திகா செய்யும் செயல்களால், கார்த்திகாவின் குடும்பம் வேறு ஊருக்கு குடி பெயர்கிறார்கள். ஜீவாவோ மன அழுத்தத்தில் நாயகியைத் தேடி கண்டறிந்து அவளிடம் செல்கையில் அங்கு நிகழும் சில நிகழ்வுகள் அதனால் ஏற்படும் விளைவுகளை இப்படத்தில் காணலாம்.

அறிமுக நாயகனும்,நாயகியும் சிறப்பாக நடித்துள்ளனர். பாடல்கள் பரவாயில்லை.

அமர காவியம் - காவியம் இல்லை.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-05 14:11:46
(0)
Close (X)

அமர காவியம் (Amara Kaaviyam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே