கவிதைகளில் கலைச்சொற்கள்
*இனிய அறிவிப்பு*
*தேடல் களம் அறக்கட்டளை*
சார்பில்,
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,
*கவிதைகளில் கலைச்சொற்கள்*
எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,
*காணொளி கவியரங்கம்*
வருகிற *25.04.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி* அளவில் நடைபெற உள்ளது.
எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.
அவ்வகையிலான இத்தொடர் நிகழ்வில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 - இலக்கியக் கலைச்சொற்களை
24-வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.
*கவிதைக்கான தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.*
நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*
https://forms.gle/dgZRpZeM542tDBU68
அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருள்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. *முசிரன்* - கொடையாளி;
2. *அலங்கம்* - அரண், கொத்தளம்;
3. *குணக்கு* - கிழக்கு;
4. *பண்டி* - வண்டி;
5. *சுளகு* - முறம்;
6. *உரவு* - வலிமை, மிகுகை, நஞ்சு;
7. *கடனம்* - தாழ்வாரம், முயற்சி, ஊக்கம்;
8. *தெரிக்கல்* - விரித்துக் கூறுதல்;
9. *படுவை* - தெப்பம்;
10. *மன்றில்* - வாயில் முற்றம்;
11. *வலந்தம்* - உரை, வளைவு;
12. *வின்னம்* - மாறுபாடு, வேறுபாடு, சிதைவு, பிளவு, உறுப்பு கோணல், தடை, கேடு.
மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 24.04.2021-க்குள், அனுப்ப வேண்டிய புலன எண் 8695006900
*முயன்றால் விண்ணைத் தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் நம் பெயரைப் பதிப்போம்.* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*
பாசத்துடன்,
*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.
8695006900
கவிதைகளில் கலைச்சொற்கள் கவியரங்கில் பங்குபெறும் அனைவருக்கும் மின்னஞ்சல் வாயிலாக மின்சான்றிதழ் அனுப்பப்படும். கவிதையை புலன எண்ணில் அனுப்ப வேண்டும். பெயர்,ஊர்,அலைபேசி எண் மறக்காமல் பதிவிட வேண்டும்.
கவிதைகளில் கலைச்சொற்கள் போட்டி | Competition at Eluthu.com