பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது .
அதுவே இந்தப் போட்டியின் காரணி .
போட்டி பற்றிய விவரங்கள்...
மொத்த பரிசுத் தொகை - இந்திய ரூபாய் 5500/-
முதல் பரிசு - ரூபாய் 2000
இரண்டாம் பரிசு - ரூபாய் 1500
மூன்றாம் பரிசு - ரூபாய் 1000
இரண்டு சிறப்பு பரிசுகள் - தலா 500 ரூபாய் ..
இந்த பரிசுத் தொகை உங்கள் செம்மையான படைப்புகளுக்கு எந்த விதத்திலும் ஈடல்ல ..இருப்பினும் இதை உங்கள் திறனாய்வுக்கு பொள்ளாச்சி அபி வாசகர் வட்டம் அளிக்கும் பெருமதிப்பின் ஒரு சிறிய அடையாளாமாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம் .
அதேபோல் இந்த போட்டி வெறும் ஒரு எழுத்தாளனுக்கு ( பொள்ளாச்சி அபி ) செய்யும் மரியாதையும் அல்ல ..இதன் மூலமாக நல்ல திறனாய்வு திறன்களையும் , நல்ல சிறுகதை வாசிப்பையும் , அதன் மூலம் கற்றலையும் , கற்பித்தலையும் இந்த வாசகர வட்டம் ஆவலோடு எதிர் நோக்குகிறது .
வயதில் பெரியவர் , சிறியவர் , தளத்தில் மூத்தவர் , இளையவர் , ஆண்கள் , பெண்கள் , வாசகர் , எழுத்தாளர் , தமிழ் பித்தன் , நடுநிலையாளர் , பரிசு பெற்றவர்கள் , எழுத்து குழுமம் என எல்லோரும் படைப்புகளை சமர்பிக்க வேண்டுகிறோம் .
அவை நிச்சயம் எல்லோருக்கும் கற்றலையும் , கற்பித்தலையும் ஏற்படுத்தும் .
போட்டிக்கான தகவல்கள் ...
1 .எல்லா கதைகளையும் தெரிந்தெடுத்து ஆய்வு செய்து கடினம் என்பதால் எம் முழு கீழுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் இருந்து திறனாய்வு செய்ய பணிவோடு விண்ணப்பிக்கிறது .கீழுள்ள இணைப்புகள் உங்கள் உடனடி உதவிக்கு ...இணைப்புகள் இணைக்க முடியவில்லை ( விதிமுறைகளால் ) .கதையின் தலைப்புகளை கொடுத்துள்ளோம் .தலைப்புகளை மேலே இடது புறம் உள்ள தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்து தேடுதலை சொடுக்கினால் அந்த கதை இணைப்பு தெரியும் .
அதில்லாமல் ராம் வசந்த் எண்ணம் பகுதியில் போட்டி நடை பெறும் எல்லா நாட்களிலும் இந்த கதைகளின் இணைப்புகளை வெளியிடுவார் ...
கதை தலைப்புகள்
.........................................
1.புயலின் மறுபக்கம்
2.இன்னுமொரு கண்ணி
3.விபத்து
4.இதுதான் விதியா
5.குருவிக்கார குமாரு
6.அவரது சொந்தங்கள்
7.தல புராணம்
8.அவள் அப்படித்தான்
9.சுத்தம்
10.மெய்ப்பொருள் காண்பது அறிவு
11.எங்கேயும் எப்போதும்
2 .ஒருவர் எத்துனை திறனாய்வு கட்டுரைகளும் வழங்கலாம் .ஆனால் ஒரு கதைக்கு ஒன்று மட்டுமே இருக்கும் என நம்புகிறோம் .
3. படைப்பாளி எழுத்து தளத்தின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் .அவரின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் .உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினராகி போட்டிக்கு கட்டுரைகளை பதிக்கலாம் . எழுத்து தளத்தில் உறுப்பினர் ஆவது இரண்டு நிமிடத்துக்கும் குறைவான செயல்பாடு .அவ்வளவே .
4 . அளவு - எந்த வரையறையும் இல்லை .அந்த கதையை விட பெரிதாக எழுத மாட்டீர்கள் எனவும் நம்புகிறோம் .
5. படைப்புகளை கட்டுரை பகுதியில் பதியுங்கள் . பதிவு செய்யும் போது , இறுதியில் மற்ற போட்டிக்கு சமர்பிக்க என்பதை மறக்காமல் சொடுக்கவும் .
6. பதியும் போது பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி என தட்டச்சு செய்து பின்னர் கதையின் பெயரை குறிப்பிடவும் .
6. எழுத்துப் பிழை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் .
7." இது என் சொந்த படைப்பே" என்ற உறுதியை கீழே பதிவு செய்தல் அவசியம் .
8 .போட்டி முடிவுகளுக்கு சக படைப்பாளிகளால் வழங்கப்படும் கருத்துகள், புள்ளிகள், மதிப்பெண்கள் மற்றும் பகிர்வுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதை நாங்களும் உங்களுக்கு உறுதி செய்கிறோம் .
வாருங்கள் . எழுதுங்கள் ...
வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி .
அபி வாசகர் வட்டம்
பி கு - சந்தேகம் / ஆலோசனைகள் இருப்பின் இங்கே கருத்து பகுதியில் வினவலாம் / அளிக்கலாம் தயை கூர்ந்து .
நன்றி
போட்டி குறித்த விளக்கங்களுக்கு
என் சுயவிவரம் பகுதியில் இதற்கான மின்னஞ்சல் முகவரி இணைக்கிறேன் . தொடர்பு கொள்ளவும் ..
நன்றி .
( போட்டி ஆரம்ப நாள் 24/05/2015 .
கீழே ஒரு திருத்த பதிவிற்காக இன்றைய தேதி ஏற்றப்பட்டது .
அவ்வளவே ...)
முதல் பரிசு - ரூபாய் 2000
இரண்டாம் பரிசு - ரூபாய் 1500
மூன்றாம் பரிசு - ரூபாய் 1000
இரண்டு சிறப்பு பரிசுகள் - தலா 500 ரூபாய் .
போட்டி ஆரம்ப நாள் - 24 / 05 / 2015
போட்டி இறுதி நாள் - 16 / 06 / 2015
போட்டி முடிவு நாள் - 01 / 07 / 2015
பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி போட்டி | Competition at Eluthu.com