சேர்த்தவர் : Dileepan Pa, 12-Oct-17, 1:07 pm

ஓடி விளையாடு பாப்பா - குழந்தைகள் தினப் போட்டி

ஓடி விளையாடு பாப்பா - குழந்தைகள் தினப் போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

மழலைகளை நேசிக்காதவர்கள் இந்த உலகில் எவரும் இருக்க முடியாது. நம் எல்லோருக்குமே குழந்தைகளாகவே இருந்துவிட்டிருக்கலாம் என்ற எண்ணம் வாழ்வில் ஒருமுறையாவது வந்திருக்கும். குழந்தைகளே நம் எதிர்காலத்திற்கான வித்து. இந்த பிரபஞ்சத்தின் எதிர்காலமும் அவர்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் நம் குழந்தைகளின் வாழ்வியலை, அவர்களின் உளவியலை, மன ஓட்டங்களை நாம் பெரியவர்களாகவே அணுகிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை நாம் காது கொடுத்துக் கேட்பதே இல்லை. அவர்களிடம் உட்கார்ந்து உரையாடுவதில்லை. அவர்களின் அழுகுரல் பெரும்பாலும் பொதுப்படையாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த போட்டி குழந்தைகளை பற்றி பேசாத விஷயங்களை பேசுவதற்காகவே நடத்தப்படுகிறது.

இன்றைய குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி, பொதுவெளிகளில் அவர்களை சீண்டும் மூடர்களை கையாள்வது பற்றி, உறவினர்கள் என்ற போர்வையில் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் பற்றி, நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல் பற்றிய விளக்கங்களை, இன்றைய சமூக ஊடகங்கள் - இணையம் - தொழில்நுட்பம் குழந்தைகளுக்குள் நிகழ்த்தும் மாற்றங்கள் குறித்து, அவற்றை எதிர்கொள்ளும் முறை குறித்து, பெற்றோர்கள் குழந்தைகளை புரிந்துகொள்ளும் வழிமுறைகள், குழந்தைகளோடு பெற்றோர்கள் உரையாட வேண்டிய விஷயங்கள் என குழந்தைகள் பற்றி அனைத்து விஷயங்களையும் பேசலாம்.

போட்டிக்கு கதை - கட்டுரை என இரண்டும் அனுப்பலாம்.

ஒருவர் அதிகபட்சம் 2 கதைகள் - 2 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.

பரிசு விவரங்கள்

மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது (கதைக்கு ஒன்று, கட்டுரைக்கு ஒன்று). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது (கதைக்கு ஒன்று, கட்டுரைக்கு ஒன்று). அனைத்திற்கும் தலா 1000ரூபாய் பரிசு வழங்கப்படும்.

படைப்புகளை மேலே புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

போட்டிக்கு வந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து மின்னூலாக பதிப்பிக்கவிருக்கிறோம்.

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஓடி விளையாடு பாப்பா” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.

படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899.

நன்றி.

ஆரம்ப நாள் : 12-Oct-2017
இறுதி நாள் : 26-Oct-2017  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 01-Dec-2017

ஓடி விளையாடு பாப்பா - குழந்தைகள் தினப் போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே