எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மேகக்கோலம்-வித்யா மனம் முழுதும் மேகக்கோலமிட்டேன்-அன்பே நீ பெரும் மழையில்...

மேகக்கோலம்-வித்யா

மனம் முழுதும்
மேகக்கோலமிட்டேன்-அன்பே நீ
பெரும் மழையில்
சிலிர்க்க வைத்தாய்........!!

விழி மூடா
விரதமிருந்தேன்-அன்பே நீ
உயிர்கூட்டில் விதை
விதைத்தாய்..........!!

கண்ணீர் நிரப்பி
கவி எழுதினேன்-அன்பே நீ
இமை விளிம்பில்
உயிர் நிரப்பினாய்..........!!

சுகந்தமென நான் நினைத்து
அமிலக்குப்பி பரிசளித்தேன்-அன்பே நீ
புன்னகையில்
புதைத்துக்கொண்டாய்.........!!

தொலைத்தது எதுவாகினும்
இழந்தது உனையடா........

நான் என்ன செய்து
உனை மீட்பேன்-இதோ....உயிரே
உன் மரணப்படுக்கையில்
என் பெயரெழுதுகிறேன் .........!!


"இந்த மேகக்கோலத்தில் புள்ளிகள்(பார்வைகள்) குறைந்திருப்பதேனோ"

நாள் : 3-Sep-14, 7:14 pm

மேலே