பாட்டுக்கு நான் அடிமை... ப்ரியன். மணமாவதற்கு முன்பு வரை...
பாட்டுக்கு நான் அடிமை... ப்ரியன்.
மணமாவதற்கு முன்பு வரை காட்டுப்பாக்கத்தில் தங்கி இருந்தேன். தினம் அலுவலகம் வருவதற்கு முன்பு கடைசியாக புதிய "காதல்" பாடல் ஒன்றை உரத்த ஒலி வைத்து கேட்டுவிட்டு வருவேன். அன்று முழுவதும் அந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன், வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் மனதிற்க்குள் மகிழ்ச்சியாக.
ஒரு நாள் வேலையின் இடையில் பாடல் ஒன்றை முணுமுணுத்தேன், பகீர் என்றானது. நான் பாடியது புதிதும் இல்லை, காதலும் இல்லை. இந்த பாடல் எப்படி மனதில் வந்தது என யோசித்து... காலையில வீட்டுல இந்த பாட்டு கேட்டோமா-இல்ல, பஸ்டாப் டீ கடையில-இல்ல, பஸ்ஸில் யாரும் மொபைல்ல-இல்ல, ஆஃபீஸ்ல-வாய்ப்பே இல்ல, சிந்தித்து... விடை கிடைக்கவில்லை. சரி என அந்த "பழைய" பாடலை விட்டு விட்டு, புதிய பாடல் ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்து விட்டேன்.
சில நாட்களுக்கு பிறகு, வழக்கம் போல அலுவலகம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தேன். கிண்டி பேருந்து நிலையத்தில் இருந்து தொடர்வண்டி நிலையம் வழியாக மறுபக்கம் கடந்து சென்றேன் அடுத்த பேருந்தை பிடிக்க. மக்கள் நெரிசலில் தத்தளித்து தொடர்வண்டி நிலைய படி இறங்கும்போது அங்கு ஓரமாய் அமர்ந்திருந்த கண் தெரியாதவர் மீது கால் பட்டதையும் அவசரத்தில் கண்டுகொள்ளவில்லை. அலுவலகம் வந்த பிறகு நினைத்தேன், இருவருக்கும் தெரியாம இடித்துவிட்டு வந்துவிட்டோமென.
ஆனால் அன்று முழுவதும் ஒரு பழைய பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தேன், அந்த கண் தெரியாதவர் பாடிக்கொண்டிருந்தது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.......